Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்?
தூத்துக்குடி: இந்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபைத் தேர்தலில் யார் ஆட்சியை பிடிப்பார் என்பது குறித்து சித்தர் ஒருவர் கணித்துள்ளார். அது போல் விஜய் 2031 ஆம் ஆண்டு தேர்தலில்தான் ஆட்சிக்கு வருவார் என்றும் கணித்துள்ளார்.
தூத்துக்குடியில் சித்தர் ஒருவர் கூறியிருப்பதாவது: மகாசத்குருவின் அருளால் சனிப்பெயர்ச்சி விழா நடந்து முடிந்தது. சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்தார். நம் பீடத்தில் இருக்கும் மகா சனீஸ்வர பகவானுக்கு 108 யாக குண்டங்கள் அமைத்து உலகம் நன்மை பெற பிரார்த்தனை நடத்தப்பட்டது.

தற்போது உலகில் போர் நடந்து வருகிறது. இந்த யுத்தங்கள் நீங்கி உலக மக்கள் அமைதியாக இருக்க மகா யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தால் ஈரான் மீதான யுத்தம் நீங்கி, வளைகுடா நாடுகள் எல்லாம் அமைதி பெற்று செழிப்போடு இருக்க யாகம் நடைபெற்றது. உலகம் செழிக்கும்.
சட்டசபை தேர்தல் மிகவும் அருமையாக இருக்கும். மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள் என அந்த சித்தர் தெரிவித்துள்ளார். அப்படி மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள் என்றால் திமுகதான் ஆட்சியை பிடிக்கும் என சொல்லியிருக்கிறார்.
நடிகர் விஜய் இந்த தேர்தலில் பெரும் வாக்கு வங்கிகளை பெற்று, வரும் 2031 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் விஜய் முதல்வராவார் என்பது ஜோதிடரின் கணிப்பு!
தமிழக சட்டசபை தேர்தல் 2026-க்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அரசியல் களம் மிகுந்த சூடுபிடித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி (மார்ச் 2026), தேர்தல் ஏப்ரல்-மே 2026 இல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை பதவிக்காலம் மே 10, 2026 அன்று முடிவடைகிறது. ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.
இந்த தேர்தலில் 118 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சி அமைக்கும். திமுக கூட்டணியில் விசிக, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 23 கட்சிகள் அங்கம் வகித்துள்ளன. இவர்களில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
மற்ற கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நடந்து வருகிறது. அது போல் அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி பாமக, புதிய நீதி கட்சி, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. விஜய் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
நாம் தமிழர் கட்சி தமிழகத்திலும் புதுவையில் தனித்து போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தவெக ஆகியவை மக்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளித் தருகிறார்கள். ஆனால் மக்கள் யாருக்கு ஓட்டு போட்டு அரியணையில் ஏற்றுவார்கள் என்பது தேர்தல் முடிவுகளின் போதுதான் தெரியும்.
அதிமுக கூட்டணியில் இணையுமாறு தவெகவுக்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக என்னதான் ஆட்சியில் பங்கு உள்ளிட்ட ஆஃபர்களை கொடுத்தாலும் அதை ஏற்க மற்ற கட்சிகள் தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது. தவெக தொடங்கியது முதலே அக்கட்சி மீது பலருக்கு ஈர்ப்பு இல்லாத நிலையில் கரூர் விவகாரம், சங்கீதா விவாகரத்து விவகாரம் உள்ளிட்டவை விஜய்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. எனவே அவர் சுதாரித்துக் கொண்டு அதிமுக கூட்டணியில் இணைந்தால் கட்சியை காப்பாற்ற வாக்கு சதவீதத்தையாவது எடுத்துக் கொள்ளலாம் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் அறிவுரையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications