பழைய ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் நிறைவேற்றப்படுமா? ஓய்வு பெறுவோருக்கு வந்த சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும். 2021ல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, 2026 சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு 'TOPS' (Tamil Nadu Old Pension Scheme) திட்டத்தை 2026 ஜனவரி முதல் அமல்படுத்துவதாக அறிவித்தது. ஆனால் இதுவரை விதிகள் வகுக்கப்படவில்லை. இதனால் கட்டாய ஓய்வு பெறுபவர்களும், ஓய்வு பெறவிருப்பவர்களும் பணப்பலன்கள் இன்றி மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி வேல்முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "அரசின் முதுகெலும்பாகத் திகழும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை எவ்வித நிபந்தனையுமின்றி நிறைவேற்றினால், அரசு இயந்திரம் சரியான திசையில் இயங்கும். எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

Will the Old Pension Scheme be reinstated for government employees Challenges for retirees

2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS - சிபிஎஸ்) அமல்படுத்தப்பட்டது. தற்போது மொத்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களில் சுமார் 70 சதவீதம் பேர் இந்தப் புதிய திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். இதில் 7,864 பேர் பணியில் இருக்கும்போதே பல்வேறு காரணங்களால் இறந்துள்ளனர். 45,625 பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களிடம் இருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, அதே அளவு தொகையை அரசும் பங்களிப்பாகச் செலுத்தும். அவசரத் தேவைக்கு அந்த நிதியிலிருந்து தொகை எடுக்கும் வசதியும் இருந்தது. மேலும், ஓய்வுக்குப் பிறகு பணிக்கொடை, மாதாந்திர ஓய்வூதியம், ஓய்வூதியர் மறைவுக்குப் பின் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பல பலன்கள் கிடைத்தன. ஆனால் புதிய திட்டத்தில் இத்தகைய பலன்கள் மறுக்கப்பட்டுள்ளன. பணியில் இருந்தபோது பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்புத் தொகை மட்டுமே திருப்பித் தரப்படுகிறது.

தமிழ்நாட்டில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றும் நிலையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்தக் கோரி கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கங்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

2011ல் அதிமுக, 2016 மற்றும் 2021ல் திமுக தலைமையிலான அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்தன. 2011 வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக ஜெயலலிதா அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அப்போதைய முதலமைச்சர் பழனிசாமியிடம் அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால் அந்த அறிக்கையில் என்ன இருந்தது என்பது இதுவரை வெளியாகவில்லை.

2021ல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, 2026 சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு 'TOPS' (Tamil Nadu Old Pension Scheme) திட்டத்தை 2026 ஜனவரி முதல் அமல்படுத்துவதாக அறிவித்தது. ஆனால் இதுவரை விதிகள் வகுக்கப்படவில்லை. இதனால் கட்டாய ஓய்வு பெறுபவர்களும், ஓய்வு பெறவிருப்பவர்களும் பணப்பலன்கள் இன்றி மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.

இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி புதிய ஓய்வூதியத் திட்ட ஒழிப்பு இயக்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழக அரசுக்கு ஒரு லட்சம் தபால் அட்டைகள் அனுப்பும் பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எனவே அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+