சிரிக்க கூட முடியாத அளவிற்கு.. அப்செட்டான விஜய்.. மனசை குடையும் 2 விஷயங்கள்! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரண்டு சம்பவங்கள் முதல்வர் விஜய்யை ஆட்டிப்படைத்திருக்கிறது என்கிறார்கள் அரசு அதிகாரிகள். கடந்த ஒரு வாரமாக ஆலோசகர்களிடமும் சரி, உயரதிகாரிகளிடமும் சரி... முதல்வர் விஜய் சிரித்துப் பேசவில்லை.

சீரியஸ் மூடிலேயே இருக்கிறார் என்கிறார்கள். என்ன நடந்தது என்று விசாரித் தபோது, ''குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் தாக்குதல் நடந்து வருவதை தடுக்கவே சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடி படையை உருவாக்கி னார் முதல்வர் விஜய். குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், குற்றவாளிகளை போலீசில் பிடித்துக் கொடுக்கவும், அவர்களுக்கு விரைந்து தண்டனை பெற்று தருவதும் தான் இவர்களுக்கான முக்கியப்பணிகள். ஆனால், சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை அமைத்தும் குற்றங்கள் குறையவில்லை. ஒரே நாளில் 5 பாலியல் குற்றச் சம்பவங்கள் நடந்திருப்பதை அறிந்து மிகவும் அப்-செட்டாகி விட்டார் விஜய்.

vijay tvk

இது தொடர்பாக, எதிர்க்கட்சிகளும் சோசியல் மீடியாக்களும் எழுப்பும் கேள்விகள், காவல்துறைக்கான அமைச்சர் என்கிற முறையில் முதல்வர் விஜய் தான் பொறுப்பேற்க வேண்டும் என வைக்கப்படும் எதிர்மறை விமர்சனங்கள் அவரை தூங்கவிடாமல் செய்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், உள்துறையை கவனிக்கும் தனது முதன்மைச் செயலாளர் செந்தில் குமாரிடம் விவாதித்த முதல்வர் விஜய், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கிறது. இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. சிங்கப்பெண்கள் படை உருவாக்கப்பட்டும், இந்த குற்றங்கள் ஏன் தடுப்பட முடியவில்லை ? ஏன், குறையவில்லை? எங்கு தப்பு நடக்கிறது? என சரமாரியாகக் கேள்வி கேட்டுள்ளார். மேலும், இதை விசாரித்து எனக்கு உண்மையான ரிப்போர்ட் கொடுங்கள் என உத்தரவிட்டுள் ளார் விஜய்.

இதனையடுத்து, உள்துறை செயலாளர் மணிவாசன், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் இருவரிடமும் செந்தில்குமார் விசாரித்திருக்கிறார். முதல்வர் எழுப்பிய கேள்விகளை இவர்கள் இருவரிடமும் பாஸ் செய்திருக்கிறார் செந்தில் குமார். அவர்கள் நடைமுறையில் உள்ள சிக்கல்களை விவரிக்க, இதையெல்லாம் எப்படிங்க நான் சி.எம்.மிடம் சொல்ல முடியும்? எனக்கு ரிப்போர்ட் அனுப்புங்கள் என கேட்டுக்கொண்டிருக்கிறார் செந்தில்குமார். சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாடுகள் குறித்து ரிப்போர்ட் தயாரிக்கும் பணி நடக்கிறது'' என்கிறது உள்துறை வட்டாரம்.

அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் விஜய்யை கவலையடைய வைத்தி ருக்கும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்டு வரும் மின் தடைகளும் அதனையொட்டி மக்கள் படும் அவஸ்தைகளும் விஜய்யின் கவன த்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இதுவும் அவரை அப்-செட்டாக்கியிருக் கிறது. மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.நிர்மல்குமாரை ஃபோனில் பிடித்து, ''மின் துறையில் என்னதான் நடக்கிறது? கடந்த 5 ஆண்டில் வராத மின் தடை, இந்த 1 மாதத்தில் எப்படி வருகிறது? அரசியல் அனுபவம் உள்ளவர் என்பதால் தான் இந்த துறையை உங்களிடம் ஒப்படைத்தேன். ஆனால், ரிசல்ட் சரியில் லையே? என்னாச்சு உங்களுக்கு ? எதிரிக்கட்சிகள் விமர்சிப்பது எனக்கு பிரச்சனை இல்லை.

ஆனா, பொலிட்டிக்கலில் சம்மந்தமில்லாத மக்களிடம் வரும் குற்றச்சாட்டுகளை நான் அசல்ட்டாக டீல் பண்ண முடியாது. இந்த மின் தடை பிரச்சனையை சீரியசாக பாருங்கள். சரி செய்யுங்கள்'' என்று கோபத்தைக் காட்டியுள்ளார் முதல்வர் விஜய்.

இந்த 2 சம்பவங்களும் முதல்வர் விஜய்யை சங்கடப்படுத்தி வருவதால் அவரிடமிருந்து சிரிப்பு தொலைந்திருக்கிறது. அதனால் ஆலோசகர்களிடமும், அதிகாரிகளிடமும் கூட அவரால் இயல்பாக இருக்க முடியவில்லை என்கிற தகவல்கள் கோட்டைத் தரப்பிலிருந்து கிடைக்கிறது. அதிகாரிகள் மத்தியி லும், அமைச்சர்கள் மத்தியிலும் விஜய்யின் இந்த சீரியஸ்னசை தான் சீரிய ஷாக பார்க்கிறார்களாம்.

- சிறப்பு நிருபர் எழில்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+