திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்பாட்டிற்கு முழுத் தடை
தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவிலுக்குள் பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்வதற்கான தடை வருகிற 01.07.2026 முதல் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது. நீங்கள் பொதுத் தரிசனம், ரூ.100 விரைவுத் தரிசனம், முதியோர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை என எந்த வரிசையில் சென்றாலும், பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவீர்கள்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை வரும் 01.07.2026 முதல் மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பொதுத் தரிசனம், ரூ.100 விரைவுத் தரிசனம், முதியோர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை என எந்த வரிசையில் சென்றாலும், பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்கள் தங்கள் செல்போன்களை தாங்கள் தங்கியிருக்கும் அறைகள் அல்லது வாகனங்களிலேயே பாதுகாப்பாக வைத்துவிட்டு சாமி தரிசனம் செய்ய வரக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கோயில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 'செல்போன் வைப்பகங்களையும்' (Mobile Deposit Counter) பக்தர்கள் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பரிசோதனையின் போது பக்தர்களிடம் செல்போன் இருப்பது கண்டறியப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்பட்டுப் பாதுகாப்பு பெட்டகங்களில் வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் அவசரத் தேவைக்கு மருத்துவ மையம், ஆம்புலன்ஸ், பொது அறிவிக்கை அமைப்பு (Public Addressing System), மின்கல ஊர்திகள் மற்றும் சக்கர நாற்காலி போன்ற வசதிகள் கோயில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களை நம்பி கோவில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாழிக்கிணறு பகுதி, முடி காணிக்கை செலுத்தும் இடம், கிரி பிரகாரம் போன்ற இடங்களில் பழக்கடைகள், பூக்கடைகள், பொம்மை வியாபாரங்கள், பச்சை குத்தும் இடங்கள், இனிப்பு வியாபாரங்கள், புகைப்பட கலைஞர்கள், புகைப்பட விற்பனையாளர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்ட சிறு கடைகள் உள்ளது. இவற்றை கோயில் நிர்வாகம் அதிரடியாக அகற்றி உள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாளுக்கு நாள் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், நடைபாதைகளில் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!














Click it and Unblock the Notifications