ரூ.3 லட்சம் வரை சம்பளம்.. பணி அனுபவம் தேவையில்லை.. சென்னை எச்சிஎல்-லில் ஜுலை 6 இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ வரும் 6ம் தேதி (நாளை மறுநாள்) காலை 11 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது Process Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு கலை மற்றும் அறிவியல் பிரிவில் டிகிரி முடித்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிஇ, பிடெக் படிப்புகளை முடித்தவர்கள் என்றால் இந்த இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

hcl-mega-walkin-drive-for-freshers-process-associate-roles-on-july-6

அதேவேளையில் கலை மற்றும் அறிவியல் படிப்பை படித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இதற்கு அனுபவம் தேவையில்லை. ஏனென்றால் இது Fresher-க்கான பணி வாய்ப்பாகும்.

இருப்பினும் சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். நன்றாக கவனிக்கும் திறன் இருக்க வேண்டும். டேட்டா என்ட்ரி மற்றும் டைப்பிங் ஸ்கில்ஸ் நன்றாக இருக்க வேண்டும். மல்டி டாஸ்க்கிங் தெரிந்திருக்க வேண்டும். அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.2.50 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கான இண்டர்வியூ ஜுலை 6ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் நாளை மறுநாள் HCL Tech - ETA 2, ETA - Techno Park, Special Economic Zone, 33, Rajiv Gandhi Salai, Navallur, Thiruporur Panchayat Union, Navallur, Tamil Nadu 603 103 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

ஷிப்ட் என்பது ரோட்டேஷன் முறையில் இருக்கும். இதனால் நைட்ஷிப்ட்டிற்கும் தயாராக இருக்க வேண்டும். இன்டர்நேஷனல் டிரெய்னர்கள் மூலம் பயிற்சி வழங்கப்படுவதோடு, அலுவலகத்தில் Cab வசதி உள்ளது. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+