ராஜினாமா செய்ய மிரட்டல்: தவெக மாவட்ட செயலாளர் மீது திமுக எம்.எல்.ஏ கா. கருணாநிதி புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை ராஜினாமா செய்ய வைப்பதாக எனக்கு மிரட்டல் விடுத்ததாக தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் மீது கோவில்பட்டி திமுக எம்.எல்.ஏ கா. கருணாநிதி புகார் அளித்துள்ளார். அனிதா ராதாகிருஷ்ணனை மிரட்டிய அதே பாணியில் என்னையும் மிரட்டுகின்றனர் என கா. கருணாநிதி எம்.எல்.ஏ குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், "6 மாதங்களில் அல்ல, 6 நாட்களில் தேர்தல் வந்தாலும் தவெக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.. கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏவை ராஜினாமா செய்ய வைப்போம்.. ரூ.30 கோடி செலவழித்துவிட்டு கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார் கா கருணாநிதி. அவரால் 300 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாது, விடவும் மாட்டோம்" என பேசியிருந்தார்.

DMK MLA Alleges Threats to Resign Files Complaint Against TVK District Secretary

உடனே வருத்தம் தெரிவிக்கனும்

தவெக மாவட்ட செயலாளரும், கோவில்பட்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவருமான பாலசுப்பிரமணியன் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வைப்போம் சூழ்நிலை வந்துவிடும் என்பது மாதிரி மிரட்டல் தொனியில் பேசுவது போன்று தெரிகிறது. நேற்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்து இருக்கின்றனர்.

அவர் பேட்டி கொடுக்கும் போது, பேரம் பேசுவது போல் மிரட்டுகிறார்கள். அது எல்லாம் சேர்ந்த குனமா இருக்குமோ என எனக்கு தெரியவில்லை. நான் திமுகவை சேர்ந்தவன். எதற்கு அஞ்சுபவன் கிடையாது. அதனால் என்னை களங்கப்படுத்திய பாலசுப்பிரமணியன் உடனடியாக பகிரங்கமாக என் மீது வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.

தவெக மாவட்ட செயலாளர் பேசியது என்ன?

முதல்வர் விஜய் பிறந்தநாள் கடந்த மாதம் 22 ஆம் தேதி பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் விஜய் பிறந்தநாள் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பேசிய அவர் கூறியதாவது:- அவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சி கொஞ்சம் காலம் தாம் நீடிக்கும் என.. மு.க ஸ்டாலின் சொல்கிறார் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.. 6 மாதத்தில் வரலாம் என பேசியிருக்கிறார்.

ராஜினாமா பண்ண வச்சுடுவோம்

6 மாதங்கள் அல்ல.. 6 நாட்களில் தேர்தல் நடந்தால் கூட 234 தொகுதிகளிலும் தவெக தான் வெற்றி பெறும். ஏற்கனவே இங்க கோவில்பட்டி தொகுதியில் எம்.எல்.ஏவாக இருக்கிறார் கா கருணாநிதி அவர்கள். அவர் நினைக்கலாம் ஜெயித்துவிடலாம் என.. நாங்க சொல்றோம்.. அய்யா கருணாநிதி அவர்களே, நீங்க எழுதி வைத்துக்கொள்ளுங்கள்..

நீங்க 30 கோடி ரூபாய் செலவு செய்து தான் ஓட்டு வாங்கி வந்து இருக்கிறீர்கள். நீங்க இப்போ 300 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாது.. விடவும் மாட்டோம்.. ஏற்கனவே இங்க அப்படித்தான் ஒரு எம்.எல்.ஏ இருந்தார், இப்போது அவர் எங்க கிட்டயே வந்துவிட்டார். இவர நாங்க சீக்கிரமே ராஜினாமா பண்ண வச்சுடுவோம்.." என்று பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+