பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் புதிதாக அதிர்ச்சியூட்டும் ஒரு பாலியல் மிரட்டல் வழக்கு தமிழ்நாட்டு மக்களை மீண்டும் பதற வைத்துள்ளது. ஆட்சி மாறினாலும், பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் மாறவில்லை என்பதை இந்த சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது. 2019-ல் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூரம் இன்னும் மக்கள் மனதில் பச்சையாக உள்ள நிலையில், அதே பாணியில் சேலம் கொண்டலாம்பட்டி அருகே சின்னப்புதூர் பகுதியில் அரங்கேறியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

42 வயதான மணிகண்டன் என்பவர், அந்தப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தவர். அதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்தார். ஏழ்மை மற்றும் பணத் தேவையில் தவித்த பெண்களை இலக்காகக் கொண்டு அவர் செயல்பட்ட விதம், பொள்ளாச்சி வழக்கின் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசின் முறையை ஒத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

vijay tvk

மளிகைக் கடைக்கு வரும் பெண்களிடம் நட்பு பாராட்டி, "கடன் தருகிறேன்" அல்லது "கடன் வாங்கித் தருகிறேன்" என்று ஏமாற்றி நெருங்கியுள்ளார். நம்பிக்கை ஏற்பட்ட பிறகு தனிமையான இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களின் ஆபாச வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் இந்த வீடியோக்களைக் காட்டி மிரட்டி, பணம், நகைகள் பறித்ததோடு தொடர் பாலியல் அத்துமீறல்களிலும் ஈடுபட்டிருக்கிறார். பல பெண்கள் அவமானம் மற்றும் பயத்தால் வெளியில் சொல்ல முடியாமல் தவித்தனர். இந்த சங்கிலித் தொடர் கொடூரத்தை உடைத்தெறிந்தவர் 32 வயது துணிச்சலான ஒரு பெண். மணிகண்டனின் தொடர் துன்புறுத்தலால் பொறுமை இழந்த அவர், கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் நேரில் சென்று புகார் அளித்தார். சமூக ஊடகங்களில் பரவிய ஆபாச ஆடியோக்களும் வழக்கை வேகப்படுத்தின.

சேலம் மாநகர காவல் ஆணையர் அனில்குமார் கிரி உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டது. கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் மணிகண்டனை அதிரடியாகக் கைது செய்தனர். அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரகசிய பென்டிரைவ் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில் 50க்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாண வீடியோக்கள் மற்றும் ஆபாசப் படங்கள் இருந்ததாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது. பல பெண்களை கட்டாயப்படுத்தி ஆடைகளைக் களையச் சொல்லி வீடியோ எடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொள்ளாச்சி வழக்குடன் ஒப்பிடும்போது பல ஒற்றுமைகள் தென்படுகின்றன. பொள்ளாச்சியில் பெண்களை நட்பு ரீதியாக அணுகி வீடியோ எடுத்து மிரட்டினர். இங்கும் பொருளாதார பலவீனத்தைப் பயன்படுத்தி அதே முறையைக் கையாண்டுள்ளார் மணிகண்டன். அரசியல் பின்னணியும் ஒத்துப்போகிறது. பொள்ளாச்சி வழக்கில் அ.தி.மு.க மாணவரணி நிர்வாகி சிக்கினார். இப்போது த.வெ.க நிர்வாகி சிக்கியுள்ளார். த.வெ.க சேலம் தெற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். மணிகண்டன், "கைதானவருக்கு கட்சியுடன் எந்தத் தொடர்பும் இல்லை" என மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தமிழ்நாடு அரசியல் களத்தை சூடுபிடிக்கச் செய்துள்ளது. தி.மு.க எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கடுமையாகக் கண்டித்துள்ளனர். பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பெரிய நெட்வொர்க் இருக்கலாம் எனும் சந்தேகத்தால், வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என இடதுசாரி கட்சிகள் மற்றும் மகளிர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

தற்போது மணிகண்டன் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை மூலம் இந்த 'சேலம் பொள்ளாச்சி' விவகாரத்தின் முழு உண்மையும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான இத்தகைய வக்கிரச் செயல்களுக்கு எந்தக் கட்சியினராக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதே மக்களின் ஒருமித்த குரல்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+