அமீரகம் எடுத்த அந்த ஒரு முடிவு.. இப்போ நிற்காமல் கொட்டுது பணமழை.. இதுதான் ரியல் ஜாக்பாட்
துபாய்: ஒபெக் அமைப்பில் இருந்து விலகும் மிக முக்கிய முடிவைக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமீரகம் எடுத்திருந்தது. அது அமீரகத்திற்கு இப்போது கை மீது பலனைக் கொடுத்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் அமீரகத்தின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
உலகளவில் வளைகுடா நாடுகளில் இருந்தே அதிகபட்ச கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக இந்தியா, சீனா, இலங்கை போன்ற தெற்காசிய நாடுகள் வளைகுடா நாடுகளில் இருந்தே அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இது வளைகுடாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தது.

உச்சத்தில் ஏற்றுமதி
இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு ஐக்கிய அமீரகம் அதிகளவில் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்துள்ளதாகக் கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் கேப்ளர் (Kpler) மற்றும் வோர்டெக்ஸா (Vortexa) நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க மற்றும் ஈரான் இடையேயான போருக்கு நடுவே ஒபெக் நாடுகளில் இருந்து வெளியேறுவதாக அமீரகம் அறிவித்த ஒரே மாதத்தில் ஏற்றுமதி அளவு இப்படி உச்சத்திற்குப் போய் இருக்கிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகள் இணைந்து ஒபெக் என்ற அமைப்பை உருவாக்கி இருந்தது. ஒரே நேரத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்தால் விலை சரியும் என்பதால் இந்த அமைப்பு சந்தை நிலைமை பொறுத்து கச்சா எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும். அதாவது அதிகளவில் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்ய முடிந்தாலும் விலை ஓவராக இறங்கக்கூடாது என்பதற்காகக் கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒபெக் கட்டுப்படுத்தும்.
அமீரகம்
ஆனால், ஐக்கிய அமீரகம் கடந்த சில மாதங்களாகவே தனது கச்சா எண்ணெய் உற்பத்தி உட்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது. பல நவீனத் தொழில்நுட்பங்களை உள்ளே கொண்டு வந்திருக்கிறது. இவ்வளவு செலவு செய்த பிறகும் ஒபெக் கட்டுப்பாட்டுக் காரணமாகக் குறைந்த அளவே கச்சா எண்ணெய் உற்பத்தியைச் செய்ய முடிந்ததால் அமீரகம் அதிருப்தியில் இருந்தது. இந்தச் சூழலில் தான் மே 1ம் தேதி முதல் ஒபெக்கில் இருந்து விலகுவதாக அமீரகம் அறிவித்தது.
அதேநேரம் இந்த காலகட்டத்தில் ஹார்முஸில் பதற்றம் காரணமாக கப்பல் போக்குவரத்து முடங்கி இருந்தது அனைவருக்கும் நினைவு இருக்கும். அதைச் சமாளிக்க அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் ஒரு புதிய உத்தியைக் கையாண்டுள்ளது. அதாவது தங்கள் நாட்டு எண்ணெய் டாங்கர் கப்பல்கள் மீதான தாக்குதல் அபாயத்தைக் குறைக்க, டிரான்ஸ்பாண்டர்கள் அணைக்கப்பட்ட நிலையில் டாங்கர் ஷட்டில் சர்வீஸ் முறையை இந்நிறுவனம் செயல்படுத்தியது. அதாவது இருப்பிடத்தை ரேடாரில் காட்டாத வகையில் ஹார்முஸை கடந்திருக்கிறது. இதுவே அமீரகத்திற்கு கை கொடுத்துள்ளது.
புதிய உச்சம்
ஜூன் மாதத்தில் அமீரகத்தின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி சராசரியாக ஒரு நாளைக்கு 37 லட்சம் பேரல்களாக பதிவாகியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் ஏற்படுவதற்கு முன்பு அமீரகம் நாளொன்றுக்கு சராசரியாக 31 லட்சம் முதல் 33 லட்சம் பேரல்கள் வரை மட்டுமே ஏற்றுமதி செய்து வந்தது. இது இப்போது உச்சம் தொட்டுள்ளது. இதற்கு முன்னர், கடந்த 2020 ஏப்ரலில் சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா இடையேயான ஏற்பட்ட மோதலின்போது அமீரகத்தின் ஏற்றுமதி அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 34.4 லட்சம் பேரல்களாக இருந்தது. தற்போது அந்த சாதனையையும் அமீரகம் உடைத்துள்ளது.
காரணம்
இடைக்கால அமைதி ஒப்பந்தத்திற்கு பிறகு, ஹார்முஸில் தேங்கிக் கிடந்த கப்பல் போக்குவரத்து மெல்லச் சீராக ஆரம்பித்தது. தேங்கிக் கிடந்த கப்பல் போக்குவரத்து சீரடைந்ததும் இது உச்சம் தொட முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும், ஒபெக்கில் இருந்து வெளியேறியதால் உற்பத்தியை அதிகரித்து ஏற்றுமதியையும் வேகப்படுத்தியுள்ளது.
பிற வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை முந்தைய மாதத்தை விட ஜூன் மாதத்தை விடக் கச்சா எண்ணெய் ஏற்றுமதி 65% அதிகரித்து, ஒரு நாளைக்கு 70 லட்சம் பேரல்களாக உயர்ந்துள்ளது. இருப்பினும், இது கடந்த பிப்ரவரி மாத சராசரியான 1.66 கோடி பேரல்களை விடக் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications