என் காதிலேயே பூ வைக்கிறீங்களா.. அதிகாரிகளை மீட்டிங்கில் இருந்து வெளியேற்றிய அமைச்சர்! பெரும் பரபரப்பு
பெங்களூர்: ''பெங்களூரில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதற்காக ரூ.120 கோடி செலவழித்தும் எப்படி தெருநாய்களின் எண்ணிக்கை அப்படியே உள்ளது. என்னுடைய காதிலேயே பூ வைக்கிறீங்களா?'' என கேள்வி கால்நடை துறை அதிகாரியிடம் கேள்வி எழுப்பி அவரை மீட்டிங்கில் இருந்து பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக டிகே சிவக்குமார் செயல்பட்டு வருகிறார். இவரது அமைச்சரவையில் பெங்களூர் நகர வளர்ச்சி துறையின் அமைச்சராக கிருஷ்ணபைரே கவுடா உள்ளார்.
இந்நிலையில் தான் பெங்களூரில் ஜிபிஏ எனும் கிரேட்டர் பெங்களூர் ஆணையத்தில் பணியாற்றி வரும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் கிருஷ்ணபைரே கவுடா நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பெங்களூரில் தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவது பற்றியும், நகரை பசுமையாக்கப்பட்ட நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகள் பற்றியும் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்போது கிருஷ்ணபைரே கவுடா தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக கால்நடை துறையை சேர்ந்தவர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு கால்நடை துறை அதிகாரி சரியான டேட்டாவுடன் பதிலளிக்கவில்லை. இதனால் டென்ஷனான அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா, ''ஆண்டுதோறும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதற்காக பணம் ஒதுக்கப்படுகிறீர்கள். ஆனால் தெருநாய்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. தெருநாய்களின் எண்ணிக்கை அப்படியே உள்ளது. என்னுடைய காதில் பூ வைக்கிறீங்களா?.
மீட்டிங் எதற்காக வந்தீர்கள். தமாஸ் பண்ணிட்டு இருக்கீங்களா.. கடந்த 5 ஆண்டுகளில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய எவ்வளவு பணம் ஒதுக்கீடுசெய்யப்பட்டது? நீங்கள் மொத்தம் எத்தனை பேர் உள்ளீர்கள்?'' என்று கோபமாக கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த அதிகாரி, ''மொத்தம் 19 பேர் உள்ளோம். ரூ.120 கோடி செலவிடப்பட்டுள்ளது'' என்றார்.
இதையடுத்து கிருஷ்ணபைரே கவுடா, ''19 அதிகாரிகள் இருந்தும் ஒரு டேட்டாவை எடுத்து வர முடியாதா? ரூ.120 கோடி செலவழித்தும் தெருநாய்களின் எண்ணிக்கை அப்படியே இருப்பது எப்படி? அவரை முதலில் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். நான் அவரிடம் பேச விரும்பவில்லை. அரசு மீது அடிப்படையான ரியாதை இல்லை என்றால் என்ன செய்வது?'' என்று கடிந்து கெண்டார்.
இதனால் அந்த அதிகாரி மீட்டிங்கில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதில் இன்னொரு அதிகாரி அந்த இடத்தில் வந்து அமர்ந்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் நேற்றைய மீட்டிங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications