எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!
நியூயார்க்: எட்டு நாட்கள்... 192 மணிநேரத் தொடர் குண்டுவீச்சு! வல்லரசு அமெரிக்காவின் ஒட்டுமொத்த விமானப் படையும் ஈரானின் வான்பரப்பைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், வெள்ளை மாளிகையின் ரகசிய அறையில் அதிபர் டிரம்ப் இப்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி, போர்க்களத்தை விடப் பயங்கரமானது.
ஈரான் கொஞ்சமும் இறங்கி வரவில்லை. கிட்டத்தட்ட அமெரிக்காவின் தடுப்பு அரண்களை மத்திய கிழக்கில் ஈரான் உடைந்துவிட்டது. பல வருட பணிகள் எல்லாம் 1 வாரத்தில் காலியாகிவிட்டது. ஈரான் போர் எட்டாவது நாளை எட்டியிருக்கும் நிலையில், டிரம்ப் வசம் இப்போது மூன்றே மூன்று ஆப்ஷன்கள்தான் மிச்சமிருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, அந்த மூன்றும் அமெரிக்காவிற்கு 'செக்' வைக்கும் ஆபத்தான நகர்வுகள்!

ஆப்ஷன் 1: "வெற்றி பெற்றுவிட்டோம்" எனச் சொல்லி பின்வாங்குதல்!
இது கேட்பதற்கு வேண்டுமானால் கௌரவமாக இருக்கலாம், ஆனால் அதன் விளைவுகள் மிக மோசமானவை:
இந்தியா உள்ளிட்ட நாடுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அமெரிக்கா மத்திய கிழக்கை (Middle East) விட்டு நிரந்தரமாக வெளியேற வேண்டியிருக்கும்.
அமெரிக்கா வெளியேறினால், இஸ்ரேலின் நாட்கள் எண்ணப்படத் தொடங்கும்.
ஈரான் மீண்டும் ஒரு பீனிக்ஸ் பறவையாக விஸ்வரூபம் எடுக்கும்.
உலக நாடுகளின் பார்வையில் அமெரிக்கா ஒரு "பலவீனமான புலி"யாகத் தெரியும்.
சுருக்கமாகச் சொன்னால், டிரம்பின் அரசியல் வாழ்க்கை மற்றொரு 'ஆப்கானிஸ்தான் தோல்வியாக' வரலாற்றில் பதியப்படும்.
ஆப்ஷன் 2: தரைவழித் தாக்குதல் (Boots on the Ground)
விமானப் படை தோல்வியுற்றால் ராணுவத்தை உள்ளே இறக்குவது பழைய பாணி. ஆனால் ஈரானில் அது தற்கொலைக்குச் சமம்:
ஈரான் என்பது அலாஸ்கா மாகாணத்தின் அளவு பெரிய நாடு. 90 மில்லியன் மக்கள், முழுவதும் மலைப்பாங்கான நிலப்பரப்பு.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை 20 ஆண்டுகள் போராடியும் வீழ்த்த முடியாத நேட்டோ படைகளுக்கு, ஈரான் ஒரு 'நரகமாக' மாறும்.
முக்கியமாக, ஈரானின் ட்ரோன் (Drone) தொழில்நுட்பம் நவீன போர் வியூகங்களையே தலைகீழாக மாற்றிவிட்டது.
கொல்லப்பட்ட தளபதிகளை விட, இப்போது களத்தில் இருக்கும் புதிய தலைமுறை ஈரான் கமாண்டர்கள் அதிக புத்திசாலிகள் மற்றும் ஆபத்தானவர்கள். இங்கிருந்து வெளியேற எந்த 'எக்ஸிட் பிளானும்' (Exit Strategy) அமெரிக்காவிடம் இல்லை!
ஆப்ஷன் 3: அணு ஆயுதப் பிரயோகம் (Nuclear Weapons)
இது நினைத்துப் பார்க்கக்கூட முடியாத ஒரு பேரழிவு:
ஈரான் மீது ஒரு அணுக்கரு குண்டு விழுந்தால், அடுத்த நிமிடம் ஒட்டுமொத்த உலகமும் அமெரிக்காவிற்கு எதிராகத் திரும்பும்.
ரஷ்யாவும் சீனாவும் நேரடியாகப் போரில் குதிக்கும்.
ஈரானின் அணு ஆயுத அண்டை நாடான பாகிஸ்தான் சும்மா இருக்காது.
அணுக்கதிர் வீச்சு ஈரானை மட்டும் அழிக்காது, இஸ்ரேல் உட்பட ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் விஷமாக்கும். இது நாகரிகத்தின் முடிவாகக்கூட இருக்கலாம்!
சத்தமில்லாமல் நடக்கும் அந்த ஒரு விஷயம்!
உலகிலேயே ஆகச்சிறந்த விமானப்படை அமெரிக்காவிடம் இருக்கலாம். கடந்த 8 நாட்களாக ஈரான் மீது மழை போல குண்டுகள் பொழியப்படலாம். ஆனால், ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் குறைந்தாலும் (முதல் நாளில் 350, எட்டாம் நாளில் 15), அவர்களின் 'ட்ரோன்' தாக்குதல்கள் நின்றபாடில்லை.
ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் வீரர் ஒருவரைச் சிறைபிடித்திருக்கிறது. சவுதி அரேபியாவின் எண்ணெய் வயல்கள் தகித்துக்கொண்டிருக்கின்றன. இதைப் பார்த்துவிட்டு சீனா சொன்ன ஒற்றை வரி: "இதற்கு நீங்கள் தயாராக இல்லை!"
டிரம்ப் இப்போது பின்வாங்குவதற்கும், புதைகுழிக்கும், உலக அழிவுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டிருக்கிறார். அவரிடம் நல்ல ஆப்ஷன்கள் எதுவுமில்லை; இருப்பது எல்லாம் 'மோசம்', 'மிக மோசம்' மற்றும் 'நினைத்துப் பார்க்க முடியாதவை' மட்டுமே! தயாராக இருங்கள்... உலகம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கப் போகிறது!
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications