வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கன்னியாகுமரியில் இருந்து 350 கி.மீ தொலைவில், இந்திய பெருங்கடலில் ஈரானின் போர்க்கப்பல் ஒன்று, அமெரிக்க நீர்மூழ்கி கப்பலால் தாக்கி அழிக்கப்பட்டது. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்கா கெத்தாக பேசி வருகிறது. ஆனால், டிரம்புக்கு இது பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்று சர்வதேச சட்ட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

போர் விஷயத்தில் தாக்குதல் நடத்தும்போது கெத்தாக இருக்கும். ஆனால், சர்வதேச சட்டம் என்று ஒன்று இருக்கிறது. சட்டத்தின் பிடியிலிருந்து அவ்வளவு சீக்கிரம் தப்பித்துவிட முடியாது. இப்படியான சட்டத்தில்தான் டிரம்ப் சிக்கி இருக்கிறார்.

Trump in Trouble

என்ன நடந்தது?

இலங்கையின் 'கேலி' பகுதியில் கடந்த 4ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு ஈரானின் போர் கப்பலான 'ஐரிஸ் டெனா'-வை அமெரிக்காவின் நீர் மூழ்கி கப்பல் தாக்கி அழித்தது. இதில் 80க்கும் அதிகமான கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர். 32 பேரை இலங்கை கடற்படை பத்திரமாக மீட்டது. இந்தியாவுக்கு மிக அருகில் இந்த தாக்குதல் நடந்தது, இது எப்படி இந்திய கடற்படைக்கு தெரியாமல் இருந்தது? அல்லது தெரிந்தும் ஈரான் கப்பலை எச்சரிக்கவில்லையா? என்கிற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

பிரச்சனை இதுதான்

இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி இருந்தாலும், டிரம்ப் தான் பெரிய சிக்கலில் இருக்கிறார். ஏனெனில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் நடத்திய தாக்குதல் சட்டவிரோதமானது. சர்வதேச சட்டங்களின்படி, ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது போரை அறிவித்தால்தான், போர் கப்பல்களை தாக்கி அழிக்க முடியும். அமெரிக்கா இப்படியான அறிவிப்பை வெளியிடவில்லை. எனவே இந்த தாக்குதல் ஐநா சாசனத்தின் 2(4) பிரிவுக்கு எதிரானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

எப்படி தாக்க முடியும்?

'ஐரிஸ் டெனா' எனும் ஈரானிய போர்க் கப்பல், இந்தியாவின் அழைப்பின் பேரில் விசாகப்பட்டினத்திற்கு வந்திருந்தது. பயிற்சியை முடித்துவிட்டு கப்பல் திரும்பிக்கொண்டிருந்தபோது, தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது போர் கப்பல் என்றாலும் கூட, நட்புமுறை பயணத்தில் இருந்தது. எனவே, இதில் இருந்த ஆயுதங்கள் பயன்பாட்டில் இல்லை. இப்படி உடனடி அச்சுறுத்தல் இல்லாத கப்பலை தாக்குவது என்பது 'கரோலின் சோதனை' எனும் சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிரானது.

இந்த விதிதான், ஒரு கப்பலை எப்போது தாக்கலாம் என்பதை தீர்மானிக்கிறது. அந்த வகையில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் சட்டவிரோதமானது என இந்த சட்டம் சொல்கிறது.

இலங்கைக்கு ஆபத்து

'ஐரிஸ் டெனா' மூழ்கடிக்கப்பட்டது, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில். அதாவது ஒரு நாட்டின் நிலப்பரப்பிலிருந்து 200 கடல் மைல் வரை இருக்கும் கடல் பகுதிகள், அந்த நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலமாகும். இந்த பகுதியில் வேறு நாட்டின் போர் கப்பல்கள் இருந்தால் அதை மற்றொரு நாடு தாக்குவது சட்டவிரோதம். 200 கடல் மைல்களுக்கு அப்பால் என்ன நடந்தாலும் பிரச்சனை இல்லை.

'ஐரிஸ் டெனா' தாக்கப்பட்டது இலங்கையின் கேலி கடற்கரையிலிருந்து வெறும் 40 கி.மீ தொலைவில்தான். எனவே அமெரிக்கா சர்வதேச கடல் விதிகளை மீறியிருக்கிறது.

டிரம்புக்கு சிக்கல்

இது இல்லாமல், மேலும் சில குற்றச்சாட்டுகளும் அமெரிக்கா மீது இருக்கிறது. அதாவது எதிரி நாட்டு போர் கப்பலை தாக்கினால், கப்பல் மூழ்குகிறது எனில், அதில் உள்ள வீரர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தாக்குதல் நடத்திய நாட்டிற்கு உண்டு. 'ஐரிஸ் டெனா' விஷயத்தில் அமெரிக்கா ஈரான் வீரர்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே இதற்கெல்லாம் முழு பொறுப்பு டிரம்ப்தான். இந்த விவகாரங்கள் தொடர்பான விசாரணை வரும்போது, அது டிரம்புக்கு எதிராக பெரிய பிரச்சனையாக மாறும். இருப்பினும் சர்வதேச நீதிமன்றத்தில் அமெரிக்கா உறுப்பினர் இல்லை என்பதால், இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து டிரம்ப் தப்பிக்க வாய்ப்புகள் அதிகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+