தங்கம் விலை குறையுது.. பெட்ரோல் விலை குறையுது.. ஆனால், இது நல்லதில்ல!
-ஏ.கே.கான்
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கிடுகிடுவென குறைந்து வருகிறது, இதன் விலை மீண்டும் கொஞ்சமாக கொஞ்சமாக அதிகரித்து வந்தாலும், வீழ்ச்சியோடு ஒப்பிடுகையில் விலை ஏற்ற விகிதம் கொஞ்சமே. அதே போல கச்சா எண்ணெயின் விலையும் படுவேகத்தில் சரிந்து வருகிறது. இதனால் பெட்ரோல்-டீசல் விலையும் உலகம் முழுவதும் தொடர்ந்து குறைய ஆரம்பித்துள்ளது. இந்தியாவிலும் இந்த வாரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.50 வரை குறைக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் தங்க நகைகள் வாங்குவோரும் பைக்- கார் ஓட்டிகளும் அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும் பல நாடுகளின் பொருளாதார நிபுணர்களும் அடுத்து நடக்கப் போவதை நினைத்து அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
விலை குறைஞ்சா இந்த பொருளாதார நிபுணர்களுக்கு ஆகாதோ என்று அவர்களைத் திட்ட வேண்டாம். காரணம், வரலாறு அப்படி!
எப்போதெல்லாம் தங்கத்தின் விலை அடியோடு சரிந்திருக்கிறதோ அதைத் தொடர்ந்து உலக அளவில் பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதே போல எப்போதெல்லாம் கச்சா எண்ணெய் விலை டமார் ஆகியிருக்கிறதோ அதைத் தொடர்ந்தும் பொருளாதாரத் தேக்கம் உலகை கவ்வியிருக்கிறது.

அமெரிக்காவுக்கு சளி பிடித்தால் இந்தியாவும் உகாண்டாவும்...
அதிலும் குறிப்பாக அமெரிக்காவையே இந்த பொருளாதாரத் தேக்கம் முதலில் தாக்கியிருக்கிறது. அமெரிக்காவுக்கு சளி பிடித்தால் இந்தியாவும் உகாண்டாவும் கூட தும்மியாக வேண்டுமே... இந்தப் பயம் தான் அமெரிக்காவையும் மற்ற நாடுகளையும் பிடிக்கத் துவங்கியுள்ளது.
இதற்கு மிகச் சமீபத்திய உதாரணம்.. 2008ம் ஆண்டு தான். அந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் இருந்து தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் லேசாக குறைய ஆரம்பித்து, படுவேகத்தில் சரிய ஆரம்பித்தன. இதையடுத்தே அமெரிக்காவில் பொருளாதாரத் தேக்கம் ஆரம்பமானது. வங்கிகள் ஒன்றன் பின் ஒன்றாக திவால் ஆயின. அவை கொடுத்த வீட்டுக் கடன்கள் வங்கிகளையே மூழ்கடித்தன.
1929ம் ஆண்டில் 'கிரேட் டிப்ரஸன்' எனப்படும் அமெரிக்கா சந்தித்த மாபெரும் பொருளாதார முடக்கத்துக்குப் பின் அந்த நாடு சந்தித்த பெரிய பொருளாதாரத் தேக்கம் இது தான். அந்த கிரேட் டிப்ரஸன் உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் மூழ்கடித்தது. இத்தனைக்கும் இப்போது இருப்பது மாதிரி இந்த அளவுக்கு ஒரு நாட்டைச் சார்ந்து இன்னொரு நாட்டின் பொருளாதாரம் அப்போது இருக்கவில்லை.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications