Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்...

Subscribe to Oneindia Tamil

இதற்கிடையே வாரன் பபெட், ஜான் பால்சன், ஜார்ஜ் சோராஸ் போன்ற உலகின் முன்னணி முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் நுகர்வோர் அதிகம் பயன்படுத்தும் பொருட்களை விற்கும் நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகளை வாபஸ் பெற ஆரம்பித்துள்ளனர்.

உதாரணத்துக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன், புராக்டர் அண்ட் கேம்பிள், கிராப்ட் போன்ற வெகுஜன பொருட்களை விற்கும் நிறுவனங்களில் செய்திருந்த முதலீடுகளை விற்க ஆரம்பித்துள்ளார் வாரன் பபெட். அதே போல இன்டெல் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தனக்கு இருந்த பங்குகள் அனைத்தையும் விற்றுவிட்டார். மேலும் ஐபிஎம் நிறுவனத்தில் தனக்கு இருந்த பங்குகளையும் விற்றுவிட்டார். ஜெனரல் மோட்டார்ஸ் கார் நிறுவனத்தில் இருந்த முதலீடுகளையும் திரும்ப வாங்கிவிட்டார்.

அதே போல ஜார்ஜ் சோராஸ் சிட்டி வங்கி, கோல்ட்மேன் சேக்ஸ், ஜேபி மார்கன் ஆகிய நிதி அமைப்புகளில் இருந்த முதலீடுகளை எல்லாம் விற்றுவிட்டார்.

Recession

இவர்கள் ஏன் இதைச் செய்கிறார்கள்?. பங்குச் சந்தைகளில் பல்வேறு நிறுவனங்களில் இருந்த தங்களது முதலீடுகளை எல்லாம் ஏன் திரும்ப எடுக்கிறார்கள்?. பங்குச் சந்தைகளில் சரிவு ஏதும் வரப் போகிறதா?.

இப்போது மீண்டும் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதை மீண்டும் படித்தால் முதுகுத்தண்டில் ஜில் என்று ஒரு பீலிங் வரும்..

அது இது தான்...

''எப்போதெல்லாம் தங்கத்தின் விலை அடியோடு சரிந்திருக்கிறதோ அதைத் தொடர்ந்து உலக அளவில் பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதே போல எப்போதெல்லாம் கச்சா எண்ணெய் விலை டமார் ஆகியிருக்கிறதோ அதைத் தொடர்ந்தும் பொருளாதாரத் தேக்கம் உலகை கவ்வியிருக்கிறது''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+