தமிழ்நாட்டில் பாஜக 'தேறுமா? தேறாதா?' 31 பேர் குழுவுடன் பிரதமர் மோடி நாளை திருச்சியில் ஆலோசனை!
திருச்சி: தமிழ்நாட்டுக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடி திருச்சியில் 31 பேர் கொண்ட பாஜக குழுவினருடன் தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து தனியே ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடி நாளை திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். திருச்சியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவர்களுக்குப் பிரதமர் மோடி விருதுகள் வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார். திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மேலும் ரயில்வே திட்டங்கள், சாலை திட்டங்கள், திருச்சி என்.ஐ.டி. மாணவர் விடுதி உள்ளிட்டவைகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும் திறந்தும் வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு லட்சத் தீவுகளுக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

லோக்சபா தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறும் நிலையில் புத்தாண்டின் தொடக்கத்திலேயே பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை தமிழ்நாடு பாஜகவினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது. அதுவும் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்ட நிலையில் பாஜக தனித்து விடப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் பாஜகவுடன் எந்த ஒரு பெரியார் கட்சியுடனும் அதாவது 5%-க்கும் அதிகமான வாக்குகளைக் கொண்ட கட்சிகள் கூட்டணியில் இல்லை. மேலும் லோக்சபா தேர்தல் தொடர்பான தமிழ்நாட்டு கருத்து கணிப்புகள் பெரும்பாலும் பாஜகவுக்கு 0 முதல் 1 இடம் எனவே கணித்தும் வருகின்றன. வட இந்தியாவில் மிகப் பெரிய பிரம்மாண்ட வெற்றியைப் பெறும் என கணிக்கும் அத்தனை கணிப்புகளுமே தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இவ்வளவுதான் தேறும் என அடித்தே சொல்கின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பாஜகவை எப்படி அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வது? தமிழ்நாட்டின் யதார்த்தமான அரசியல் கள நிலவரம் என்ன? உண்மையிலேயே தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு 0 முதல் 1 இடம் என்கிற நிலைமைதானா? என்பவை தொடர்பாக பிரதமர் மோடி நாளை திருச்சியில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்களை உள்ளடக்கிய 31 பேர் கொண்ட குழு இந்த ஆலோசனையில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications