FACT CHECK - பாஜகவுக்கு ஓட்டு போடாதீங்க.. அமித்ஷா பேசும் வீடியோவால் பரபர! உண்மை என்ன?
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவுக்கு மக்கள் ஓட்டு போட வேண்டாம் என பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இதன் உண்மை தன்மை என்னவென்று பார்ப்போம்.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக தரப்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள் என பலர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய பிரதேச மாநிலத்தில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

இந்த நிலையில்தான் ஒரு வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. "பாருங்கள்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய பிரதேச மாநிலம் தேபால்பூரில் பாஜக வேட்பாளர் மனோஜ் நிர்பயா சிங்கிற்கு பிரச்சாரம் செய்தபோது பாஜகவுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று பேசி உள்ளார் என்று குறிப்பிட்டு அந்த வீடியோ பகிரப்பட்டது. சாதாரணமாக அந்த வீடியோவை பார்க்கையில் அமித்ஷா அவ்வாறு பேசியதாகவே தெரிகிறது. பலரும் அதை உண்மை என்று என்று நம்பி வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா என அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தனர்.
இந்த நிலையில், அதன் உண்மை தன்மை குறித்து நாம் ஆய்வு செய்தோம். ஸ்லோ மோசனில் அந்த வீடியோவை பார்த்தபோது பாஜகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று கூறும் இடத்தில் வீடியோவில் தொடர்ச்சி இன்றி வெட்டப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக கூகுளில் தேடியபோது கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் தேதி அமித்ஷாவின் யூடியூப் சேனலில் அவரது பேச்சின் முழு வீடியோ இடம்பெற்று இருந்தது. அவரது உரையின் 7.40 வது நிமிடத்தில் அந்த விசயம் வருகிறது.
அதில் அவர், "17 ஆம் தேதி நீங்கள் வாக்களிக்க செல்லும்போது, ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மனோஜ் நிர்பயா சிங்கை எம்.எல்.ஏ. ஆக்குவதற்காக மட்டும் வாக்களிக்காதீர்கள். உங்கள் வாக்கின் மூலம் அவர் எம்.எல்.ஏ. ஆனால் அது மத்திய பிரதேசத்தின் வளர்ச்சி, பாதுகாப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மபியில் பாஜக அரசை வடிவமைக்க உங்கள் வாக்கு முக்கிய பங்காற்றும். மோடியின் டபுள் எஞ்சின் ஆட்சி தொடர உதவும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
எனவே அமித்ஷா பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆனால், இந்த வீடியோவில் உள்ள ஒரு பகுதியை மட்டும் வெட்டி அமித்ஷா பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பேசி இருப்பதாக தவறான தகவலுடன் பகிர்ந்து உள்ளார்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Fact Check
வெளியான செய்தி
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு ஓட்டு போட வேண்டாம் என பேசியுள்ளார்
முடிவு
வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி தவறான பொருள்படும்படி பகிர்ந்து உள்ளார்கள்
ரேட்டிங்
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications