FACT CHECK - முஸ்லிம் பகுதி செல்லும் முன் நெற்றியில் திலகத்தை அழித்தாரா காங்கிரஸ் தலைவர் கார்கே?
சென்னை: முஸ்லிம் பகுதிக்கு செல்லும் முன் நெற்றியில் உள்ள திலகத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழித்ததாக பாஜகவினர் வீடியோ ஒன்றை பகிர்ந்து வரும் நிலையில் அதன் உண்மை தன்மை பற்றி அலசுவோம்.
தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதற்காக காங்கிரஸ், பாஜக, மாநில கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அதன் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்பி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஒவ்வொரு மாநிலமாக சென்று தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
This is how CONgress leaders fool Hindus !
— C T Ravi 🇮🇳 ಸಿ ಟಿ ರವಿ (@CTRavi_BJP) October 20, 2023
They forcibly wear Tilak when campaigning in Hindu dominated areas and coolly wipe it off when they are in Muslim areas.
Golmaal Hai Bhai Sab Golmaal Hai ! ! ! pic.twitter.com/zvCKiacf6W
இந்த நிலையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முஸ்லிம் பகுதிகளுக்கு செல்வதற்கு முன்பாக நெற்றியில் வைத்திருந்த திலகத்தை அழித்துக்கொள்கிறார் என்று கூறி பாஜகவினர் ஒரு வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை கர்நாடக பாஜக பிரமுகர் சிடி ரவி ட்விட்டரில் பகிர்ந்து, "காங்கிரஸ் தலைவர்கள் இப்படிதான் இந்துக்களை முட்டாள்களாக்குகின்றனர். இந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் திலகத்தை கட்டாயமாக வைத்துக்கொள்கின்றனர். முஸ்லிம்கள் வாழும் பகுதிக்கும் செல்லும்போது அதை அழித்து விடுகின்றனர்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருந்து வந்த சிடி ரவி இந்த வீடியோவை பகிர்ந்ததை தொடர்ந்து அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் என பலரும் அதை பகிர்ந்து மல்லிகார்ஜுன கார்கேவையும் காங்கிரஸ் கட்சியையும் விமர்சித்து வந்தனர். இப்படி அதிகளவில் டிரெண்ட் செய்யப்படும் இந்த வீடியோவின் உண்மை தன்மை என்னவென்று பார்ப்போம். சிடி ரவி பகிர்ந்த அந்த வீடியோவில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர் சந்திப்பில் அமர்ந்திருக்கும்போது அவரது உதவியாளர் நெற்றியில் இருந்த திலகத்தை அழிப்பதுபோல் காட்சி இடம்பெற்று உள்ளது.
So much hatred?! pic.twitter.com/TL5MaB3OSR
— Chakravarty Sulibele (@astitvam) April 27, 2023
உண்மை என்ன?: இந்த வீடியோ மற்றும் அத்துடன் பகிரப்படும் தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய இணையத்தில் தகவல்களை தேடியபோதுதான் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது தெரிந்தது. பாஜக ஆதரவாளரான சக்ரவர்த்தி சுலிபெல் என்பவர் கடந்த ஏப்ரல் மாதமே இதனை பகிர்ந்து உள்ளார்.
கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலேயே இது நேரலை செய்யப்பட்டு இருந்தது. அந்த வீடியோவில் மல்லிகார்ஜுன கார்கே நெற்றியில் இருந்த திலகம் அழிக்கப்படும் காட்சி உள்ளது. குறிப்பிட்ட அந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்ற நாளில் அவர், கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்துக்காக ஹுப்ளி - தர்வாட், சிக்கோடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று இருக்கிறார். இந்த பகுதிகள் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இடங்கள் இல்லை.
அதேபோல் இந்துக்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் அவர் திலகம் வைக்கவில்லை. ஹூப்ளி பகுதிக்கு பிரச்சாரத்துக்காக கார்கே சென்றபோது அவரது நெற்றியில் குங்குமம் வைத்து ஆரத்தி எடுத்து அப்பகுதியினர் வரவேற்றதாக தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டு உள்ளது. செய்தியாளர் சந்திப்புக்கு முன்பாக பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும் நெற்றி திலகத்தை அழித்து இருக்கும் காட்சிகள் உள்ளன.

அரசியல் தலைவர்கள் பலர் செய்தியாளர் சந்திப்பின்போது கட்சி பாகுபாடின்றி இவ்வாறு செய்வது வழக்கமாக உள்ளது. எனவே பாஜகவை சேர்ந்த சிடி ரவி சொன்னதைபோல், அவராகவே இந்துக்களின் பகுதிக்கு செல்லும் முன் நெற்றித் திலகத்தை வைத்துக்கொண்டு, முஸ்லிம்களின் பகுதிக்கு செல்வதற்கு முன் அதனை அழித்ததாக பரவும் தகவல் வதந்தி என்பதை உறுதி செய்ய முடிகிறது.

Fact Check
வெளியான செய்தி
முஸ்லிம் பகுதிக்கு செல்லும் முன் நெற்றியில் உள்ள திலகத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழிக்கிறார்.
முடிவு
செய்தியாளர் சந்திப்பிற்காகவே மல்லிகார்ஜுன கார்கே நெற்றியில் உள்ள திலகத்தை அழித்தார்.
ரேட்டிங்
-
திமுக - காங்., கூட்டணியில் புதிய புயல்.. ‘கை' வென்ற 7 தொகுதிகளை கேட்கும் ‘உதயசூரியன்'.. குழப்பம் -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
1971 இல் மிருக பலம் பெற்ற திமுக! சுருண்டு விழுந்த காமராஜர்? இந்திராவுக்கு தண்ணி காட்டிய கருணாநிதி! -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
சீட் நம்பரை குறைக்கும் திமுக.. ஏன் அதிக தொகுதிகள் வேண்டும்? அழுத்தமாக பேசிய கே.பாலகிருஷ்ணன்! -
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications