ஒரு வருடத்திற்கு வெறும் ரூ.399 மட்டுமே.. ஜியோ ரீசார்ஜ் சலுகை? குறிவைக்கும் மோசடி கும்பல்! Fact Check
சென்னை: ஜியோ ரீசார்ஜ் ஒரு ஆண்டுக்கு ரூ. 399 மட்டுமே என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மோசடி தளங்களின் இந்த விளம்பரங்களை நம்பி நாம் பணம் செலுத்தினால், நம் பணம் பறிபோகும். எனவே, டெலிகாம் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் வெளியாகும் தகவல்களை சரிபார்த்து ரீசார்ஜ் செய்யவும்.
நாடு முழுவதும் செல்போன் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது ஜியோ நிறுவனம். 25% வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இந்த கட்டண உயர்வு ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ரூ. 155 ஆக இருந்த மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 189 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தினசரி 1 ஜிபி நெட் வழங்கும் திட்டமானது ரூ. 209 ஆக இருந்து வந்த நிலையில் இந்த மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 249 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் கட்டண உயர்வு: ரூ. 239 ஆக இருந்த தினசரி 1.5 ஜிபி நெட் பேக் உடன் கூடிய மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 299 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 299 ஆக இருந்த தினசரி 2 ஜிபி நெட் உடன் கூடிய மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 349 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 349 ஆக இருந்த தினசரி 2.5 ஜிபி நெட் உடன் கூடிய மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 399 ஆக உயர்த்தப்ட்டுள்ளது.
ரூபாய் 2,999 ரூபாய்க்கு ஆண்டு முழுவதும் தினசரி 2.5 ஜிபி இணைய வசதியோடு சேவை வழங்கப்பட்ட நிலையில் அது ரூ. 3,599 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5ஜி உட்கட்டமைப்புகாக அதிக அளவில் முதலீடுகள் செய்துள்ளதால் அதனை ஈடுகட்ட, ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜியோ மட்டுமின்றி ஏர்டெல், வோடபோனும்: செல்போன் சேவை கட்டண உயர்வைப் பொறுத்தவரை எப்போதும் முதலில் ஒரு நிறுவனம் உயர்த்தினால் மற்ற நிறுவனங்களும் அடுத்தடுத்து ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திவிடும். அந்தவகையில் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தின. இந்த கட்டண உயர்வால் கோடிக்கணக்கான செல்போன் பயன்பாட்டாளர்கள் அதிக செலவு செய்ய வேண்டி உள்ளது.
மோசடி தளங்கள்: ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய செல்போன் வாடிக்கையாளர்கள் பலரும், புலம்பிக்கொண்டே அதிக தொகை கொடுத்து ரீசார்ஜ் செய்து வருகின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு ஆசை காட்டி, மோசடி செய்யும் கும்பல் ஃபேஸ்புக்கை குறி வைத்து களமிறங்கி உள்ளது.

பரவி வரும் விளம்பரம்: "ஜியோ ரீசார்ஜ் கட்டணம் ஆண்டுக்கு வெறும் ரூ. 399 மட்டுமே.. மிகப்பெரிய ரீசார்ஜ் சலுகை இன்றைக்கு மட்டுமே" என பல்வேறு பெயர்களில் இயங்கும் போலி இணையதளங்கள் வாயிலாக ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள் அதிகளவில் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த தளங்கள், உண்மையான ஜியோ தளம் போன்றே டிசைன் செய்யப்பட்டுள்ளன.
இதனால் வாடிக்கையாளர்கள் இதனை நம்பி உள்ளே சென்று, மொபைல் எண்ணை உள்ளிட்டு ரீசார்ஜ் செய்கின்றனர். ஆனால், இந்த இணையதளம் போலியானது. நாம் கூகுள் பே, போன் பே போன்ற ஆன்லைன் பேமெண்ட் தளங்கள் மூலம் ரூ. 399 செலுத்தினாலும் நமது எண்ணுக்கு ரீசார்ஜ் செய்யப்படாது.

என்ன நடக்கும்?: அந்த பணத்தை மோசடி கும்பல் லவட்டிச் செல்லும். ஜியோ மட்டுமின்றி, ஏர்டெல், வோடஃபோன், பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களும் ரீசார்ஜ் செய்யலாம் என்ற வகையில் இந்த போலி இணையதளத்தில் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்தால் நம் பணம் காலியாவதோடு, நமது தகவல்களும் திருடப்படும் அபாயம் உள்ளது.
ரூ. 399க்கு எந்த மொபைல் சேவை நிறுவனமும் ஆண்டு பிளான் வழங்கவில்லை. எனவே, கட்டண உயர்வு சூழலை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் கும்பலை நம்பி பணத்தை தொலைக்க வேண்டாம். பொதுமக்கள் யாரும், போலியான ரீசார்ஜ் இணையதள விளம்பரங்களை நம்பி மோசடிக்கு ஆளாக வேண்டாம். டெலிகாம் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் வெளியாகும் தகவல்களை சரிபார்த்து ரீசார்ஜ் செய்யவும்.

Fact Check
வெளியான செய்தி
ஒரு வருடத்திற்கு வெறும் ரூ. 399க்கு ரீசார்ஜ் செய்யுங்கள், இன்றைக்கு மட்டுமே இந்த சலுகை என்ற பெயரில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
முடிவு
மோசடி இணையதளங்கள், செல்போன் வாடிக்கையாளர்களிடம் பண மோசடி செய்யும் வகையில் போலியாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதனை நம்பி ஏமாற வேண்டாம்.
ரேட்டிங்
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications