தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை தந்த பாகிஸ்தான் நிறுவனம்? தீயாக பரவும் தகவல்! உண்மை என்ன
டெல்லி: பாகிஸ்தானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்துள்ளதாகத் தகவல் பரவிய நிலையில், இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்று பார்க்கலாம்.
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பாகப் பாரத ஸ்டேட் வங்கியிடம் பெறப்பட்ட தரவுகளைத் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது.

தேர்தல் பத்திரங்கள்: தேர்தல் ஆணைய இணையதளத்தில் 763 பக்கங்களைக் கொண்ட இரண்டு பட்டியல்கள் வெளியிடப்பட்டன. ஒரு பட்டியலில் தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் விவரங்களும், மற்றொரு பட்டியலில் அரசியல் கட்சிகள் பெற்ற பத்திரங்களின் விவரங்களும் இடம் பெற்றுள்ளன. இருப்பினும், தேர்தல் பத்திரங்களின் எண்கள் இல்லாத நிலையில், எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு நன்கொடை அளித்துள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மின்சார நிறுவனம் ஒன்று தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிக்கு அளித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த நிறுவனம் பாஜகவுக்கு நன்கொடை அளித்ததாகவும் கூறி வருகின்றனர்.
விமர்சனம்: இது தொடர்பாகக் காங்கிரஸின் ஷாநவாஸ் அஸ்லாம், "நரேந்திர மோடி ராஜினாமா செய்ய வேண்டும். பாகிஸ்தான் நிறுவனத்திடம் நன்கொடை வாங்கிய பாஜக, நாட்டை கொள்ளையடிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி இருக்கிறது. இந்த நூற்றாண்டின் ஊழல் பிரதமராக நரேந்திர மோடி உள்ளார். இனி தேர்தல் இயந்திரங்களைத் தயாரிப்பது மட்டுமே பாக்கி" என்று தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் பிரஹாரி பிரிவு, "2019 மக்களவைத் தேர்தலின் போது பாகிஸ்தானைச் சேர்ந்த ஹப் பவர் நிறுவனம் பாஜகவுக்கு ரூ.95 லட்சத்தை நன்கொடையாக வழங்கியது. அதே நேரத்தில், புல்வாமாவில் நமது வீரர்களும் கொல்லப்பட்டனர். பாஜக போன்ற துரோகக் கட்சியை நான் பார்த்ததில்லை. பாஜக ஏன் பாகிஸ்தான் நிறுவனங்களை அதிகம் நேசிக்கிறது? நன்கொடைகளை மறைக்க பாஜக விரும்பியதற்கு இதுவே காரணம்" என்று சாடியிருந்தார். இப்படி நெட்டிசன்கள் பலரும் பாஜகவைச் சாடியுள்ளனர்.
தேர்தல் பத்திரங்கள் வழியாக.. அரசியல் கட்சிகளுக்கு கோடிகளை கொட்டிய "டாப் 10" நிறுவனங்கள் லிஸ்ட்
பாகிஸ்தான் நிறுவனம்: The HUB power என்ற நிறுவனம் அளித்த நன்கொடை தான் இப்போது விவாத பொருள் ஆகியுள்ளது. இந்த the HUB power என்பதைக் கூகுளில் போட்டுத் தேடினால் அது பாகிஸ்தானைச் சேர்ந்த மின்சார கம்பெனி என்று வருவதாகவும் அதுவே சர்ச்சைக்குக் காரணமாக இருக்கிறது. 2019 தேர்தல் காலகட்டத்தில் நன்கொடை தரப்பட்டுள்ள நிலையில், புல்வாமா தாக்குதலையும் இணைத்து சிலர் கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.
உண்மை என்ன: இருப்பினும், இது குறித்து நாம் கொஞ்சம் தீவிரமாக ஆய்வு செய்தால் அது பாகிஸ்தானைச் சேர்ந்த நிறுவனம் இல்லை என்பது உறுதியாகிறது. அதிகாரப்பூர்வ ஜிஎஸ்டி போர்ட்டலில் தேடினால் இந்த 'ஹப் பவர் கம்பெனி’ என்பது டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் என்பதை உறுதியாகிறது. இந்த நிறுவனம் ரவி மெஹ்ரா என்பவரின் பெயரில் இருக்கிறது. ஜிஎஸ்டி போர்ட்டலில் தேடினால் நம்மால் உறுதி செய்ய முடிகிறது.
அதேபோல பாகிஸ்தானைச் சேர்ந்த அந்த நிறுவனமும் விளக்கமளித்துள்ளது. அதாவது தங்கள் நிறுவனத்தின் பெயர் HUBCO என்றும் HUB என்ற நிறுவனத்தைச் சிலர் தங்கள் நிறுவனம் என்று தவறாகக் கருதியுள்ளதாகவும் அந்த நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்கவில்லை என்பது உறுதியாகிறது

Fact Check
வெளியான செய்தி
பாகிஸ்தானைச் சேர்ந்த The HUB power என்ற நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்துள்ளது
முடிவு
The HUB power என்பது பாகிஸ்தான் நிறுவனம் இல்லை. டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனமாகும்.
ரேட்டிங்
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications