தேர்தல் பத்திரங்கள் வழியாக.. அரசியல் கட்சிகளுக்கு கோடிகளை கொட்டிய "டாப் 10" நிறுவனங்கள் லிஸ்ட்
டெல்லி: தேர்தல் பத்திர விவரங்களை இன்று மாலை தேர்தல் ஆணையம் பொது வெளியில் வெளியிட்டது. இதன்படி, அரசியல் கட்சிகளுக்கு கோடிகளை அள்ளிக்கொடுத்த டாப் 10 நிறுவனங்கள் எவை எவை என்று லிஸ்டை இங்கே பார்க்கலாம்.
கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அறிமுகம் செய்தது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக அறிமுகம் செய்ப்பட்ட இத்திட்டத்தின்படி தேர்தல் பத்திரங்கள் எஸ்.பி.ஐ வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் விற்கப்பட்டன. இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது என கடந்த மாதம் 15ம் தேதி தீர்ப்பளித்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றம் கூறியது போல், நேற்று முன்தினம் எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரம் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது.
டாப் 10 லிஸ்ட்: இந்த நிலையில், தேர்தல் ஆணையம், இன்று மாலை தேர்தல் பத்திர விவரங்களை பொதுவெளியில் அதாவது இணையத்தில் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்களை வழங்கியவர்களின் விவரங்கள் தேதி வாரியாக இடம் பெற்றுள்ளன. தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து எந்தெந்த கட்சிகள் ரொக்கமாக மாற்றின என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு பத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
எந்தெந்த கட்சிகள் எவ்வளவு தொகையை வாங்கியிருக்கின்றன போன்ற விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில், அரசியல் கட்சிகளுக்கு கோடிகளை அள்ளிக்கொடுத்த டாப் 10 நிறுவனங்கள் எவை எவை என்று லிஸ்டை இங்கே பார்க்கலாம். அதன்படி,
வேதாந்தா லிமிடெட் 3வது இடம்:
* பியூட்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸஸ் பிஆர் -1,368 கோடி
* மேகா என் ஜினியரிஞ் & இன்ஃப்ராஸ்டர்க்சர்ஸ் லிமிடெட்: 966 கோடி
* Qwik சப்ளே செயின் பிரைவேட் லிமிடெட்: 410 கோடி
* வேதாந்தா லிமிடெட்: 400 கோடி
* ஹல்டியா எனர்ஜி லிமிடெட்ட்: 377 கோடி
* பாரதி குரூப்: 247 கோடி
* எஸ்ஸல் மைனிங் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்: 224 கோடி
* வெஸ்டர்ன் UP பவர் டிரான்ஸ்மிஸன் கம்பெனி: 220 கோடி
* கேவேண்டர் புட் பார்க் இன்ஃப்ரா லிமிடெட்: 195 கோடி
* மட்னாலல் லிமிடெட்டு: 185 கோடி. இந்த பத்து நிறுவனங்கள் டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்துள்ளது.
4 மாதம் அவகாசம் கேட்ட எஸ்பிஐ: முன்னதாக, உச்ச நீதிமன்றம், இந்த தேர்தல் பத்திரங்களை வெளியிடும், எஸ்.பி.ஐ அது தொடர்பான தகவல்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டும், அந்த விபரங்களை, மார்ச் 13 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. எஸ்பிஐ 4 மாதங்கள் அவகாசம் கேட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அவகாசம் அளிக்க மறுத்தது.
இதையடுத்து, தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் விவரங்கள், அவற்றை ரொக்கமாக மாற்றிய கட்சிகளின் விவரங்களை நேற்று முன்தினம் தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ அளித்தது. இதையடுத்து, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
விட்டமின் எம் வரலையே.. பதறும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்.. தமிழக தேர்தலில்.. பெரிய ட்விஸ்ட்! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
அப்செட்டில் ஸ்டாலின்.. ராகுல் பிரசாரத்திற்கு வராததால் காங்கிரஸின் 28 தொகுதிகளிலும் சிக்கல்.. பின்னணி -
விஜயால் வந்த ரெட் சிக்னல்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. உடனே பறந்த மேஜர் உத்தரவு! -
4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications