அடுத்த 2 மணி நேரம்.. 22 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை.. சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலூர், கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாகவே தமிழகத்தில் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலையில் மழை பெய்த நிலையில் இன்று மாலையிலும் கனமழை கொட்டி தீர்த்தது.

Chennai Under Orange Alert Rain Likely in 22 Tamil Nadu Districts Over Next 2 Hours

சென்னையில் இன்று மாலை பல்வேறு இடங்களில் திடீரென கனமழை விட்டு விளாசியது. இந்த சூழலில் அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதேபோன்று இன்று இரவு 7 மணி வரை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், பெரம்பலூர், அரியலூர், குமரி, நெல்லை, தென்காசி, மதுரை, தூத்துக்குடி, தேனி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதியை ஒட்டியுள்ள இடங்கள் என 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+