“விஜய் பேசவே வேண்டாம்... சைலண்ட் கில்லர்!” திரிஷா சொன்ன வார்த்தை! ரசிகர்கள் சொல்வது என்ன?
சென்னை: தமிழ் சினிமாவில் விஜய் - திரிஷா ஜோடி பற்றி பேசத் தொடங்கினால் ரசிகர்களால் இன்னும் நிறுத்த முடியாது. 'கில்லி', 'திருப்பாச்சி', 'ஆதி', 'லியோ' என காலத்தை கடந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இந்த ஜோடி, இன்றும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகை திரிஷா விஜய் குறித்து பேசிய ஒரு வீடியோ தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் அவர் விஜய்யை பற்றி கூறிய ஒரு வரி, ரசிகர்களிடையே புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

திரிஷா சொன்ன வார்த்தை
ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற திரிஷாவிடம், விஜய்யின் புகைப்படத்தை காட்டி அவரைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுமாறு கேட்டுள்ளனர். அதற்கு ஒரு நொடி கூட யோசிக்காமல், "சார்மர்" என்று பதிலளித்துள்ளார் திரிஷா.
அதோடு நிற்காமல், "அவரிடம் ஒரு சைலண்ட் சார்ம் இருக்கு" என்று கூறியுள்ளார். அதற்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர், "சைலண்ட் கில்லர் மாதிரியா?" என்று கேட்டதும், உடனடியாக "ஆமாம்... சைலண்ட் கில்லர் தான்" என்று சிரித்தபடி பதிலளித்துள்ளார்.
மேலும், "அவர் அதிகம் பேச வேண்டிய அவசியமே இல்லை. அவரிடம் ஒரு மிஸ்டீரியஸ் சார்ம் இருக்கு. அதுதான் அவருடைய பலம்" என்றும் திரிஷா கூறியிருந்தார்.
அந்த வீடியோ வெளியான போது சாதாரணமாக கடந்துபோன இந்த கருத்து, தற்போது மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், நடிகர் விஜய் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருப்பது தான்.
சினிமாவில் இருந்த காலத்திலேயே அதிகம் பேசாமல் தனது வேலையை மட்டுமே பார்த்து வந்தவர் விஜய். பல சர்ச்சைகள், விமர்சனங்கள், அரசியல் தாக்குதல்கள் வந்தபோதும் பெரும்பாலும் மவுனமாகவே இருந்தார். ஆனால் அதே விஜய் இன்று அரசியலிலும் பெரிய வெற்றியை பெற்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
"அதனால்தான் திரிஷா அவரை சைலண்ட் கில்லர் என்றார்", "பேசாமல் சாதிப்பவரை திரிஷா பல ஆண்டுகளுக்கு முன்பே சரியாக புரிந்துகொண்டிருந்தார்", "விஜய்யின் கேரக்டரை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அது சைலண்ட் கில்லர் தான்" என்று ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
நடிகைகளுடன் சந்திப்பு
இந்த வீடியோ வைரலாகும் நேரத்தில், விஜய்யின் ராசியான கதாநாயகி யார் என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது. ஒரு தரப்பினர் 'கில்லி' முதல் 'லியோ' வரை ரசிகர்களை கவர்ந்த விஜய் - திரிஷா ஜோடி தான் சிறந்த ஜோடி என வாதிட, மற்றொரு தரப்பினர் 'ஒன்ஸ்மோர்', 'பிரியமானவளே', 'துள்ளாத மனமும் துள்ளும்' போன்ற படங்களை எடுத்துக்காட்டி விஜய் - சிம்ரன் ஜோடிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் முதலமைச்சர் விஜய்யை நடிகை சிம்ரன் தனது குடும்பத்துடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார். அதன்பிறகு நடிகை சமந்தாவும் விஜய்யை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகின. இதனால் "அடுத்து திரிஷாவும் நேரில் சந்திப்பாரா?" என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ட்ரெண்டான போட்டோஸ்
இதற்கிடையில், விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற திரிஷா அணிந்திருந்த பட்டுச் சேலையும், விஜய் அணிந்திருந்த கருப்பு கோட் சூட்டும் அப்போது சமூக வலைதளங்களில் டிரெண்டானது. அதுவே இந்த ஜோடி மீதான ரசிகர்களின் ஈர்ப்பு இன்னும் குறையவில்லை என்பதை காட்டுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஒரு காலத்தில் திரையில் ஜோடியாக ரசிகர்களை கவர்ந்த விஜய் - திரிஷா கூட்டணி, இன்று கூட ஒரு பழைய வீடியோ மூலமாக சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. அதிலும் "சைலண்ட் கில்லர்" என்ற திரிஷாவின் ஒரு வார்த்தை, தற்போது முதல்வர் விஜய்யின் அரசியல் பயணத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்படுவது தான் இந்த வீடியோவை மீண்டும் வைரலாக்கியுள்ளது.













Click it and Unblock the Notifications