நாளை முதல் 2 நாள் ஆன்லைன் + நேரடி இண்டர்வியூ.. அழைக்கும் எச்சிஎல் நிறுவனம்
சென்னை: சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் நாளை (ஜூலை 8) மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 9) என்று மொத்தம் 2 நாட்கள் இண்டர்வியூ நடைபெற உள்ளது. நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்க முடியாதவர்கள் விண்ணப்பம் செய்து ஆன்லைன் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் Customer Service Representative (Voice Process) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு கல்லூரியில் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் பிபிஓ-வில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

அதன்படி குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 4 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
கஸ்டமர் சர்வீஸ் மற்றும் அதுசார்ந்த பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். இன்பவுண்ட் மற்றும் அவுட்பவுண்ட் கால்ஸ் இருக்கும். ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றிய புரிதல், அதன் பலன்கள், கவரேஷ், தகுதி மற்றும் கிளைம், பில்லிங் உள்ளிட்டவை பற்றி தெரிந்து விளக்கம் அளிக்க வேண்டும். கஸ்டமர்களின் விவரங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். ஹெல்த்ஹேர் சம்பந்தப்பட்ட அப்டேட்டுகளை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
அமெரிக்க ஷிப்ட் அடிப்படையில் பணி இருக்கும். இதனால் இரவு பணிக்கு தயாராக இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இதற்கான இண்டர்வியூ நாளை (ஜூலை 8) மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 9) என 2 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் இண்டர்வியூ மதியம் 1 மணி வரை இருக்கும்.
நேரடியாக இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் ETA - Techno park,Special Economic Zne, 33, Rajiv Gandhi Salai, Navalur Village and Panchayat, Thiruporur Panchayat Union, Navallur , Tamil Nadu 603 103 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
ஒருவேளை நேரடி இண்டர்வியூவில் பங்கேற்க முடியாதவர்கள் ஆன்லைன் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இதற்கு முறைப்படி அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்வது அவசியம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications