மிரண்டு போன இன்ஸ்டா பிரபலங்கள்.. வருமான வரித்துறைக்கு கிடைத்த புது அதிகாரம்? மத்திய அரசு விளக்கம்
சென்னை: வருமான வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க தனிநபரின் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளை அணுக வருமான வரித்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. இதுபற்றி மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் தனிநபரின் சமூக ஊடக கணக்குகளை அணுக வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளதாக கூறுவது வதந்தி என்று கூறியுள்ளது.
இந்தியாவில் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளை தொடங்க வேண்டும் என்றால் கண்டிப்பாக மொபைல் நம்பர் வேண்டும். இமெயில் ஐடியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் சமூக ஊடக கணக்குகளை சுமார் 50 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். சமூக ஊடகங்களில் கணக்குகளை பராமரிப்பவர்களின் தனிப்பட்ட சுய விவரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதனை அரசே நினைத்தாலும் உடனே அணுகிவிட முடியாது. அவர்கள் மீது சமூக வலைதளபதிவு தொடர்பான குற்ற வழக்கு இருந்தால் மட்டுமே அணுக முடியும். அந்த கணக்கை முடக்கிவைக்க சமூக ஊடகங்களை அரசால் அணுக முடியும். அதேநேரம் பயங்கரவாதிகளை நடவடிக்கைளை சமூக ஊடகங்களில் என்ஐஏ கண்காணிப்பது உண்டு. இந்தநிலையில், வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் சமூக ஊடகங்கள், இ-மெயில் மற்றும் டிஜிட்டல் தளங்களை அணுக வருமான வரித்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது
இதன் உண்மை தன்மை அறியாத பல நெட்டிசன்கள் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். வரி ஏய்ப்புக்கும், சமூக ஊடக கணக்குகளுக்கும் முடிச்சு போடுவது எந்தவிதத்திலும் நியாயமே இல்லை என்று கூறி வருகிறார்கள். ஏனெனில் பலர் வெளிநாடு சென்று வந்த தகவல், விலை உயர்ந்த பொருட்கள் வாங்கியது, வீடு, நிலம், சுற்றுலா என பல தகவல்களையும், அந்தரங்க தகவல்களையும், சமூக ஊடக கணக்குகளில் பதிவிடுகிறார்கள்.
இப்படியான நிலையில் சமூக ஊடக கணக்குளை வருமான வரித்துறை அணுகுவதன் மூலம் அதை பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட உரிமைகள் பறிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக பலரும் கவலை தெரிவித்தார்கள். அதாவது இது வதந்தி என்று தெரியாமலேயே பலர் பரப்பி தற்போது மத்திய அரசு விளக்கம் அளிக்கும் அளவிற்கு நிலைமை கைமீறி போயிருக்கிறது. 10 ரூபாய் காயின் செல்லாது என்று எப்படி வதந்தி பரப்பினார்களோ, அதேபோன்ற வதந்தி தான் தற்போது வருமான வரித்துறை தொடர்பாக பரவி வருகிறது.
இதுகுறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "வருமான வரி சட்டம் 2025, பிரிவு 247-ல் உள்ள சரத்துகள் தேடுதல் மற்றும் ஆய்வு தொடர்பான செயல்பாடுகளை கண்டிப்புடன் கட்டுப்படுத்துவதாக இருக்கிறது. வரி செலுத்துபவர், வரி ஏய்ப்பு செய்ததற்கு முறையான ஆதாரங்கள் கிடைக்காவிட்டால், அவர்களின் தனிப்பட்ட டிஜிட்டல் தளங்களை அணுக வருமான வரித்துறைக்கு அதிகாரம் இல்லை.
வழக்கமான தகவல் சேகரிப்பு, செயலாக்கத்திற்கு அல்லது மீளாய்வு மதிப்பீட்டின் கீழ் உள்ள வழக்குகளுக்கு வருமான வரித்துறை தனது அதிகாரங்களை பயன்படுத்த இயலாது. இந்த நடவடிக்கைகள் குறிப்பாக தேடல் மற்றும் ஆய்வின்போது கருப்பு பணம் மற்றும் பெரிய அளவிலான வரி ஏய்ப்பை இலக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதே தவிர, சட்டத்தை மதிக்கும் குடிமகனை அல்ல. தேடல் மற்றும் ஆய்வு நடவடிக்கைகளின்போது ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை கைப்பற்றும் அதிகாரம் வருமான வரி சட்டம் 1961-லேயே இருக்கிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
வருமான வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க தனிநபரின் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளை அணுக வருமான வரித்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி
முடிவு
வரி செலுத்துபவர், வரி ஏய்ப்பு செய்ததற்கு முறையான ஆதாரங்கள் கிடைக்காவிட்டால், அவர்களின் தனிப்பட்ட டிஜிட்டல் தளங்களை அணுக வருமான வரித்துறைக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ரேட்டிங்
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications