அதிமுகல எம்எல்ஏ இருந்தாலே.. அவங்களோட திமுக கூட்டணி அமைச்சுரும் ப்ரோ.. தெறிக்கவிடும் தவெக மீம்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள் சாரை சாரையாக தவெகவில் இணைந்து வருகின்றனர். இதனை வைத்து சோசியல் மீடியாவில் உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

memes

போக்கிரி படத்தில் விஜய் கிளைமேஸில், சார் குருபாய் செத்துட்டான்.. ஆனா பேட் நியூஸ் என்னனா நம்ம இன்ஸ்பெக்டர் கோவிந்தும் செத்துட்டாரு என்று சொல்வார். அதற்கு கோவிந்த் ஷாக்காகிவிடுவார். சிவி சண்முகத்தை தவெக பக்கம் கொண்டு வர பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளது. இதனை பார்த்த ஒருவர், அதிமுகல எம்எல்ஏ இருந்தால் திமுக கூட்டணி வச்சுரம் ப்ரோனு தான் சொல்றதுக்கு பக்கத்துல வந்துட்டாங்க என்று ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆத்தாடி இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே ரகம்.

memes

கனா கண்டேன் படத்தில் நேர்காணல் செய்யும் விவேக்கிடம் சிங்கமுத்து, அதனை வேற நியாபகப்படுத்திட்டீங்க தம்பி.. என் நெஞ்செல்லாம் புண்ணா இருக்கு என்பார். அதில் வரும் சிங்கமுத்துவாக சிபிஎம் சண்முகத்தை மாற்றி, அதிமுக திமுக இணைப்பு பேச்சு வார்த்தையால் மனமுடைந்த சிவசேனாவின் ராஜ் தாக்கரே எம்எல்ஏ-க்கள் சிலர் பாஜகவில் இணைந்தனர் என்ற செய்திக்கும் ரியாக்ட் செய்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அடேய்.. என்னடா இப்படி மாறிட்டீங்க ரகம்.

memes

பரிதாபங்கள் சுதாகர் தாயம் விளையாடும் போது, எல்லாரும் என்னையவே வெட்டுறீங்க என்று அழுக தொடங்கிவிடுவார். அதில் வரும் சுதாகராக விஜய்யை மாற்றி, எல்லாமே திமுக சதி.. ஸ்டாலின் சார் என்று சொல்லி கொண்டு அழுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இந்தா ஸ்டார்ட் பண்ணிட்டாங்க ரகம்.

memes

கண்டேன் காதலை படத்தில் சிங்கமுத்து, அஞ்சலி சக்தியை லவ் பணலை.. சக்தியை தான் கெளதம் லவ் பண்றான் என்று சொல்வார். அதனை அப்படியே மாற்றி, அதிமுகவை தவெக விழுங்கலை.. தவெகவை தான் அதிமுக விழுங்குகிறது என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இது வேற நடக்குதா ரகம்.

memes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+