கே.என்.நேரு இப்பவும் அமைச்சர்.. புகழ்ந்து தள்ளிய இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன்.. திமுக செம குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்தது. தவெக ஆட்சிக்கு வருவதை தடுக்க திமுக அதிமுக முயற்சித்ததாக தவெக குற்றம் சாட்டியது. தேர்தல் முடிந்து 6 மாதங்களாகியும் அந்த அரசியல் பிரச்சனை ஓயவில்லை. தவெக ஆட்சியை வெளியில் இருந்து ஆதரிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளன. கம்யூனிஸ்ட்கள் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெக மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். அதேநேரத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிலர் திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளனர். திமுக மூத்த தலைவரான கே.என். நேரு, மக்கள் மத்தியில் இப்போதும் அமைச்சராக இருக்கிறார் என்று முத்தரசன் கூறியுள்ளார். இது தவெக கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என் நேரு திருமண விழா நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், "அண்ணன் நேரு இப்போது அமைச்சரில்லை. ஆனால் அமைச்சராக இருந்தாலும், இல்லாவிடினும் இப்போதும் அவரை திருச்சியில் அவரை அமைச்சர் என்று தான் கூப்பிடுகிறார்கள். திருச்சி மாவட்ட மக்கள், நகர மக்களிடம் அவரின் பெயரை சொல்லி கேட்டால், யாரு அமைச்சரை தானே கேட்கறீங்க என மக்கள் சொல்கிறார்கள்.

DMK KN Nehru

எப்போதும் அவர் அமைச்சர்

அவர் இப்போ அமைச்சரில்லையே என சொன்னால், இல்லை எங்களுக்கு எப்போதுமே அவர்தான் அமைச்சர் என கூறுகிறார்கள். என்றைக்கும் அமைச்சராக இருக்க கூடியவர். அவர் எப்படி பேசுவார், பழகுவார் என்பது அனைவருக்கும் தெரியும். மிகவும் வெளிப்படையானவர். அவருக்கு ஒளித்து, மறைத்து பேசத்தெரியாது. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுக்கூடியவரல்ல. எல்லாரையும் நன்கு மதித்து, போற்றி நட்பு பாராட்டுவார்.

அவர் வாழ்க்கையில் எத்தனையோ சோதனைகள் உண்டு. சொந்த வாழ்க்கையில் கூட சோதனை அனுபவித்தவர். அரசியல் வாழ்க்கையிலும் அவர் சந்திக்காத சோதனைகள் இல்லை. ஆனால் சோதனைகளை துச்சமென மதித்து, நிராகரித்து திமுகவின் மிகச்சிறந்த ஊழியனாக, தொண்டனாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்" என்றார். தவெகவை கடுமையாக விமர்சிக்கும் முத்தரசன், நேருவை புகழ்ந்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+