PM SHRI திட்டத்துக்கு முழு நிதியையும் மத்திய அரசு வழங்குகிறது- அண்ணாமலை ஆணித்தரமாக சொன்னது உண்மையா?
சென்னை: PM SHRI திட்டத்துக்கான நிதி முழுவதும் மத்திய அரசு வழங்குவதாகவும், மாநில அரசு எந்த நிதியும் அளிக்கவில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தது தவறான தகவல் என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு கூறியிருப்பதாவது: PM SHRI நிதி முழுவதும் மத்திய அரசு வழங்குவதில்லை. 60:40 என்ற அடிப்படையில் 60% ஒன்றிய அரசும், 40% மாநில அரசும் பங்கிட்டுக் கொள்கின்றன. (திட்டத்தின் மொத்தத் தொகை - ரூ27,360 கோடி, மத்திய அரசு பங்கு ரூ18,128 கோடி)

இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மொத்தம் 14,500 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும். இதில், மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளும் அடங்கும். இத்திட்டத்துக்கான மத்திய அரசின் 60% பங்கும் 5 வருடங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 2022 - 2023 முதல் 2026 - 2027 வரை மட்டுமே நிதியுதவி வழங்கப்படும். அதன் பின்னர் அந்த பள்ளிகளுக்கான முழு செலவுகள் அனைத்தையும் அந்தந்த மாநிலங்களே பார்த்துக்கொள்ள வேண்டும்.
PM SHRI பள்ளிகளுக்கு முழு நிதியும் மத்திய அரசு வழங்குகிறது, இத்திட்டத்தின் கீழ் 16,000 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும் என்று அண்ணாமலை சொன்னது தவறான தகவல். இவ்வாறு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.
அண்ணாமலை கூறியிருந்தது என்ன?
PM SHRI பள்ளிகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, PM SHRI என்பது 16,000 பள்ளிகூடங்கள். இதில் முழுமையாக மத்திய அரசு நிதி உதவி கொடுத்து தேவையான அனைத்து உட்கட்டமைப்புகளையும் உருவாக்கி அதில் முழுமையாக தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வருவதுதான். தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய ஒரு பள்ளிக்கூடத்தை எடுத்து போர்டை கழற்றிவிட்டு PM SHRI என்றெல்லாம் யாரும் மாட்டவில்லை; அதற்கான எல்லா நிதியும் மத்திய அரசுதான் கொடுக்கிறது. தமிழ்நாட்டின் எந்த ஒரு பள்ளியையும் எடுத்து PM SHRI திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதை வேண்டுமானால் தமிழ்நாடு அரசையே தெளிவுபடுத்த சொல்லுங்கள் என்றார்.
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]

Fact Check
வெளியான செய்தி
PM SHRI திட்டத்துக்கு முழு நிதியையும் மத்திய அரசு வழங்குகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
முடிவு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானது
ரேட்டிங்
-
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?












Click it and Unblock the Notifications