FACT CHECK - பள்ளி மாணவர்கள் உளுந்தூர்பேட்டையில் கஞ்சா கடத்தினார்களா? பரவிய செய்தியும் உண்மையும்
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர்களிடம் ரூ.2 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் சிக்கியதாக செய்திகள் வெளியான நிலையில் அதன் உண்மை தன்மை குறித்து பார்ப்போம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த போலீசார் எல்சஎலவனாசூர்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே சென்ற 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் 6 பாக்கெட்டுகளில் 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் பள்ளி சிறார்கள் என்று செய்திகள் வெளியாகின.

இவர்கள் அதை இனிப்பு பண்டங்களுடன் கலந்து பிரித்து கொடுக்க திட்டமிட்டதாகவும் சில ஊடகங்கள், சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. பொதுமக்களும் இதனை அதிக அளவில் பகிர்ந்து வந்தனர். இது தொடர்பான உண்மையை அறியும் முயற்சியில் ஈடுபட்டோம். முதலில் ஊடகங்களில் வெளியான செய்திகளை ஆராய்ந்தபோது கைதானவர்கள் பீளமேடு கிராமத்தை சேர்ந்த ராஜா (வயது 23), மேலப்பாளையம் பாண்டியன் (வயது 20) என்பது தெரியவந்த்து. இதன் மூலம் இவர்கள் பள்ளி சிறார்கள் இல்லை என்பது உறுதியானது.
இந்த நிலையில் இது குறித்து கள்ளக்குறிச்சி காவல்துறை விளக்கம் கொடுத்து இருக்கிறது. அதன்படி, “கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உட்கோட்டம், எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் இரண்டு குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 6 பாக்கெட் (சுமார் 150 கிராம் கஞ்சா மதிப்பு 1500/- ரூபாய் ) கைப்பற்றப்பட்டு எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் பள்ளியில் படிக்கும்மாணவர்கள் அல்ல.
இது தொடர்பான செய்தியை திரித்து உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர்கள் நான்கு பேரை காவல் துறையினர் துரத்தி பிடித்து அவர்களிடம் இருந்து 2,00,000/- ரூபாய் மதிப்புடைய 500 பாக்கெட் கஞ்சா பொட்டலங்களுடன் சிக்கியதாகவும் அதை இனிப்போடு கலந்து சக மாணவர்களுக்கு கொடுக்க திட்டமிட்டதாகவும் சமூக வலைதளம் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகைப்படுத்தப்பட்டு பொய்ச்செய்தி பரவி வருகிறது.
இது சம்மந்தமாக தனியார் செய்தி தொலைக்காட்சி மற்றும் பல்வேறு சமூக ஊடகங்களில் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி வருகின்றனர் இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என்று குறிப்பிட்டு உள்ளது.

Fact Check
வெளியான செய்தி
பள்ளி மாணவர்களிடம் ரூ.2 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டங்கள் சிக்கியதாக பரவிய செய்தி
முடிவு
கஞ்சா கடத்திய இருவருமே 20 வயதை கடந்தவர்கள். பள்ளி சிறுவர்கள் இல்லை.
ரேட்டிங்
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications