FACT CHECK: பிசிசிஐ கிரிக்கெட் மாஃபியா என ஆஸி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சொன்னாரா? உண்மை என்ன?
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியுடன் நிறைவடைந்து உள்ளது. இதில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் விளையாடிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 240 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், லபுஷேனின் அபார ஆட்டத்தால் 43 வது ஓவரிலேயே அந்த அணி இலக்கை கடந்து வெற்றிபெற்றது.
உலகக்கோப்பை தொடர்பாக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பிசிசிஐ மீது விமர்சனத்தை முன்வைத்ததாக ஒரு பதிவு சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில், "இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பெற்ற வெற்றி என்பது கிரிக்கெட் மாஃபியாவுக்கு எதிரான நீதியின் வெற்றி. பணமும், அதிகாரமும் உங்களுக்கு உலகக்கோப்பையை பெற்றுத் தரவில்லை." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனை பகிர்ந்து பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்தோம். ரிக்கி பாண்டிங் சமீபத்தில் இது தொடர்பாக பேட்டி அளித்து உள்ளாரா? எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களில் அவர் இதுபோல் கருத்து தெரிவித்து உள்ளாரா என்று தேடினோம். ஆனால், இத்தகைய கருத்தை அவர் கூறியதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள், ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதை யார் சமூக வலைதளங்களில் பகிர்ந்தது என்று தேடினோம்.
அப்போது சிலர் FOX கிரிக்கெட் என்ற பிரபல தொலைக்காட்சிக்கு ரிக்கி பாண்டிங் இவ்வாறு பேட்டி அளித்ததாக கூறி எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்கள். ஆனால், அந்த தொலைக்காட்சி பேட்டியிலும் அவர் அவ்வாறு தெரிவிக்கவில்லை. அந்த தொலைக்காட்சியிலும் இதுபோன்ற பேட்டியோ செய்தியோ வெளியிடப்படவில்லை. முதன் முதலில் இப்பதிவு ASG என்ற எக்ஸ் சமூக வலைதள கணக்கில் வெளியாகி இருக்கிறது. இதே நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசிர் ஹுசைன் சொன்னதாக தவறான கருத்தை பகிர்ந்தது.
Ricky Ponting on Fox Cricket:
— ASG (@ahadfoooty) November 19, 2023
"This is a win of justice against cricket mafia. Your money and power is still not winning World Cups for you. How embarrassing."
Ponting owned India and BCCI 😂 pic.twitter.com/pc5LnseQi7
இந்த நிலையில் எலான் மஸ்ட் ட்விட்டரை வாங்கி பணம் செலுத்தினால் ப்ளூ டிக் வழங்கப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து, இந்த கணக்கிற்கும் பணம் செலுத்தியதற்காக நீல நிற வெரிபைட் டிக் வழங்கப்பட்டு உள்ளது. எனவே அதை உண்மை என நம்பி பலர் பதிவிட்டும் பகிர்ந்தும் உள்ளார்கள். இதன் மூலம் ரிக்கி பாண்டிங் சொன்னதாக வெளியான அந்த தகவலில் உண்மை இல்லை என்பது தெளிவாகிறது.
பரவிய செய்தி: இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலியாவின் வெற்றி என்பது, கிரிக்கெட் மாஃபியாவிற்கு எதிரான வெற்றி என்று ரிக்கி பாண்டிங் கருத்து

Fact Check
வெளியான செய்தி
பரவிய செய்தி: இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலியாவின் வெற்றி என்பது, கிரிக்கெட் மாஃபியாவிற்கு எதிரான வெற்றி என்று ரிக்கி பாண்டிங் கருத்து
முடிவு
உண்மை: ரிக்கி பாண்டிங் அவ்வாறு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ரேட்டிங்
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications