“முஸ்லிம்கள் பேருந்தை உடைப்பதை பார்த்தீங்களா..” கர்நாடகாவில் நடந்ததாக பரவும் வீடியோ - உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் நிற்காமல் சென்ற இலவச பேருந்தை இஸ்லாமியர்கள் அடித்து உடைப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வரும் நிலையில் அதன் உண்மை தன்மை என்னவென்று அலசுவோம்.

தமிழ்நாட்டில் மகளிருக்கு இலவச பேருந்து வசதியை அரசு ஏற்படுத்தியதைபோல், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு மகளிருக்கான இலவச பேருந்து சேவையை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு அம்மாநில மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

 Fact check about the video spreading as Muslims attack Karnataka free bus

அதே நேரம் சமூக வலைதளங்கள் இந்த திட்டம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கர்நாடகாவில் முஸ்லிம் பெண்ணை ஏற்றாமல் சென்ற இலவச பேருந்தை முஸ்லிம்கள் கும்பலாக திரண்டு தாக்குவதாக பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வந்தது.

கர்நாடகா மட்டுமின்றி தமிழ்நாட்டை சேர்ந்த வலதுசாரிகளும் இந்த வீடியோவை பகிர்ந்து வெறுப்பு கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் இந்த வீடியோ குறித்த உண்மைதன்மையை அராய இணையத்தை சல்லடை போட்டபோது, அதிர்ச்சியளிக்கும் உண்மை தகவல்கள் கிடைத்தன.

சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத் நகரில் எடுக்கப்பட்டதாகும். அப்பகுதியில் அதிகரித்து வந்த கொலை குற்றங்களை தடுக்க வலியுறுத்தி அமைதிப் பேரணி நடைபெற்று உள்ளது. அதற்கு போலீசார் அனுமதி அளிக்காத காரணத்தால் வன்முறை வெடித்து உள்ளது. அப்போது பேருந்துகள் தாக்கப்பட்டு உள்ளன. இந்த பேரணி வீடியோவை பிரபல செய்தி நிறுவனமான ANI ட்விட்டரில் பகிர்ந்து உள்ளது.

இந்த வீடியோவை எடுத்துக்கொண்டு, கர்நாடகாவில் நடைபெற்றதாக கூறி குறிப்பிட்டு சமூகத்தினர் மீது அவதூறு பரப்பி வருகிறார்கள். இதே வீடியோவை இதற்கு முன்பும் வலதுசாரிகள் தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தி இருப்பதையும், அதன் உண்மை தன்மை குறித்த தேடுதலின்போது அறிய முடிந்தது.

ஆம். கடந்த 2019 ஆம் ஆண்டு மும்பையின் பாந்த்ரா பகுதியில் முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனர்கள் பேருந்தை தாக்குதவதாக கூறி இதே வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வெறுப்பை பரப்பி உள்ளார்கள். பாந்த்ரா முதல் பிகேசி வரை பேருந்தை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர்கள் பேருந்தை தாக்கும் காட்சி பாருங்கள் என்று குறிப்பிடப்பட்டு அப்போதே வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அப்போதே பல உண்மை கண்டறியும் செய்தி நிறுவனங்கள் இது தவறான தகவல், என்றும் குஜராத்தில் எடுக்கப்பட்ட பழைய வீடியோவை பகிர்ந்து மும்பையில் நடைபெற்றதைபோல் சித்தரிக்கப்படுவதாக குறிப்பிட்டு செய்தி வெளியிட்டு உள்ளனர். இந்த நிலையில் அதே பழைய வீடியோவை மீண்டும் எடுத்து வந்த கர்நாடகாவில் நடந்த சம்பவம்போல் பரப்பி வருகிறார்கள்.

Fact Check

வெளியான செய்தி

கர்நாடகாவில் முஸ்லிம் பெண்ணை ஏற்றாமல் சென்ற இலவச பேருந்தை முஸ்லிம்கள் தாக்கும் வீடியோ

முடிவு

இது கர்நாடகாவில் எடுத்த வீடியோ அல்ல. குஜராத்தில் 2019ல் எடுத்த வீடியோவை புதியதுபோல பகிர்கிறார்கள்.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+