ராமர் கோயில் பக்தர்கள் மூலம் உபிக்கு ரூ.4 லட்சம் கோடி வருமானம்.. அண்ணாமலை சொன்ன தகவல் உண்மையா?
சென்னை: அயோத்தி ராமர் கோவில் மூலம் அடுத்த ஆண்டில் உத்திரப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.4 லட்சம் கோடி வருமானம் வரும் என்று ஸ்டேட் வங்கி கணித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்த நிலையில் அதன் உண்மைத்தன்மை என்னவென்று பார்ப்போம்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, "5 கோடி பக்தர்கள் அயோத்தி ராமர் கோவில் செல்வதன் மூலம், உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு அடுத்த ஆண்டில் ரூ.4 லட்சம் கோடி வருமானம் வரும் என்றும், வரி வருமானம் மட்டுமே ரூ.25,000 கோடி அம்மாநில அரசுக்கு வரும் என்றும், ஸ்டேட் வங்கி கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் பல, புகழ்பெற்ற மசூதிகள், தேவாலயங்கள் இருக்கும் ஆன்மீக பூமியான தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு இது போன்று வரவிருக்கும் வருமானத்தை அறநிலையத் துறை தடுக்கிறது.

தமிழகத்தில் உள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களை இணைத்தால் இதை விட அதிகமான வருமானம் வரும். அறநிலையத் துறை உண்டியல் வருமானத்தில் மட்டுமே குறியாக இருக்கிறது. வரும் பாராளுமன்றத் தேர்தல், சென்னையை முழுமையாக மீள்கட்டமைக்க வேண்டியதன் முதற்படி. அடிப்படை கட்டமைப்பு, சுகாதாரம், மழை நீர் வடிகால், சுத்தமான குடிநீர் என அனைத்து வசதிகளும் மேம்பட, ஊழலற்ற, நேர்மையான நல்லாட்சி உருவாக, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்கும்போது, தமிழகத்தில் இருந்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சென்னையை முழுமையாக மாற்ற வேண்டிய நேரம் இது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நிலையில் ஸ்டேட் வங்கி அவ்வாறு கணித்ததா என்பது குறித்த உண்மையை அறியும் முயற்சியில் ஈடுபட்டோம். அப்போது பிரபல ஆங்கில பொருளாதார ஊடகமான பிசினஸ் ஸ்டாண்டர்ட் இது தொடர்பாக ஜனவரி 24 ஆம் தேதி ஒரு கட்டுரை வெளியிட்டு உள்ளது. அதில் ஸ்டேட் வங்கியின் ECOWRAP அமைப்பு இவ்வாறு மதிப்பிட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த அறிக்கையை பார்த்தபோது, அதில் அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டது மற்றும் உத்தரப்பிரதேச அரசு மேற்கொண்ட சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகளால் சுற்றுலா பயணிகளின் மொத்த செலவு ரூ.4 லட்சம் கோடியை எட்டும் எனவும், சுற்றுலா பயணிகளால் ரூ.20,000 - ரூ.25,000 கோடி கூடுதல் வரி வருவாயை பெறும் என நாம் நம்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 30 நாட்களில் உபிக்கு பக்தர்கள் மூலம் கிடைத்த வருவாய் 2% மட்டுமே என குறிப்பிடப்பட்டு உள்ளது. இது அல்லாமல், ஆண்டுக்கு உபியில் சுற்றுலா செலவுகளில் மருத்துவம், வணிகம் போன்றவையே பெரும் பங்கு வகித்துள்ளன. இந்த அறிக்கை என்பது பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டதே தவிர அயொத்தி ராமர் கோயிலுக்கு 5 கோடி பக்தர்கள் செல்வதால் ரூ.4 லட்சம் கோடி வருமான கிடைக்கும் என்று குறிப்பிடவில்லை.
இந்த அறிக்கை ஸ்டேட் வங்கி இணையத்தில் இருந்தாலும் இதை அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ நிலைபாடு இல்லை என்று ECOWRAP ஆய்வுக் குழுவின் நிலைபாடு என்றும் பொறுப்பு துறப்பில் கூறப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அண்ணாமலை குறிப்பிடப்படி இந்த ஆய்வு முடிவை ஸ்டேட் வங்கி அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது உறுதியாகிறது.

Fact Check
வெளியான செய்தி
5 கோடி பக்தர்கள் அயோத்தி ராமர் கோவில் செல்வதன் மூலம், உத்திரப்பிரதேசத்திற்கு அடுத்த ஆண்டில் ரூ.4 லட்சம் கோடி வருமானம் வரும் என ஸ்டேட் வங்கி கணித்துள்ளதாக அண்ணாமலை பேச்சு
முடிவு
இதை ஸ்டேட் வங்கி கணிக்கவில்லை. அதிலும் பக்தர்கள் மூலம் ரூ.4 லட்சம் கோடி வருவாய் என குறிப்பிடவில்லை.
ரேட்டிங்
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications