Fact Check: லிங்க் கிளிக் பண்ணுங்க.. மாணவர்களுக்கு இலவச லேப்டாப்... வலம் வரும் மெசேஜ்! உண்மை என்ன?
சென்னை: மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுவதாகவும் அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக மெசேஜ் ஒன்று வலம் வருகிறது.
இன்றைய நவீன உலகில் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. எந்த ஒரு தகவல், செய்தியாக இருந்தாலும் சில வினாடிகளில் மக்கள் மத்தியில் சென்றடைகிறது. அரசின் திட்டங்கள் குறித்த தகவல் எல்லாம் முன்பு அரசு பணியாளர்கள் மூலமாகவும் பிற ஊடகங்கள் மூலமாக மக்களை சென்று அடைந்த காலம் போய்.. தற்போது சமூக வலைத்தளங்கள் மூலமாக அடுத்த நொடியே சென்றடைகிறது.

அரசின் நலத்திட்டங்களை மக்கள் அறிந்து அதன் மூலம் எளிதில் பயன்பெற வாய்ப்பு உள்பட பல நன்மைகள் இருக்கின்றன. ஆனால், இத்தகைய சமூக வலைத்தளங்களில் பல வதந்திகளும் பரப்பி விடப்பட்டு மோசடி நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. அரசு சில திட்டங்கள் மூலம் லோன் கொடுப்பதாக் கூறி வங்கிக் கணக்கு விவரங்களை பெறுவது..
தனிப்பட்ட தரவுகளை பெறுவது என சில மோசடிகள் அரங்கேறுகிறது. இதனால், சமூக வலைத்தளங்களின் பரவும் பொய்யான தகவல்களை கண்டறிந்து உண்மை தகவல்களை பேக்ட் செக் மூலம் உறுதி செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு மெசேஜ் பரவி வருகிறது.

அதில், மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படுவதாகவும் அந்த லேப்டாப்பை பெறுவதற்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும் கூறப்பட்டுள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்யும் போது, ஒரு நபரின் பல தனிப்பட்ட விவரங்களை கோரப்பட்டுள்ளது. இலவச லேப்டாப் மாணவர்களுக்கு கிடைக்கும் என கூறப்பட்டு இருந்ததால் பலரும் இதை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் அனுப்பியதாக தெரிகிறது.
இந்த நிலையில், இலவச லேப்டாப் வழங்கப்படும் என்ற லிங்க் உடன் வலம் வரும் இந்த மெசேஜ் உண்மையில்லை என்றும் போலியானது எனவும் மத்திய அரசின் பிஐபி பேக்ட் செக் விளக்கம் அளித்துள்ளது. மேலும் தனிப்பட்ட தகவல்களை பகிரும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் போலியான தளங்களில் பகிரக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுவதாகவும் அதற்கு விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று லிங்க் உடன் மெசேஜ் ஒன்று பரவி வருகிறது.
முடிவு
இது முற்றிலும் போலியான தகவல்.. இந்த குறுஞ்செய்தியுடன் வரும் தகவல் பொய்யானது.












Click it and Unblock the Notifications