Fact Check: பெண் குழந்தைகளுக்கு ரூ.1.80 லட்சம் மத்திய அரசு வழங்குகிறதா.. உண்மை என்ன?
பிரதமரின் கன்யா ஆஷிர்வாத் யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் மத்திய அரசு ரூபாய் 1,80,000 வழங்குவதாக தகவல் வெளியானது.
டெல்லி: மத்திய அரசின் பிரதான் மந்திரி கன்யா ஆசிர்வாத் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ரூ.1,80,000 வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டு இருந்தது. பெண் குழந்தைகளின் பெற்றோரின் வங்கிக் கணக்கில் இந்த பணம் டெபாசிட் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தகவல் பொய்யானது என பிஐபி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஏழை, எளிய மக்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டுக்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
அரசு திட்டங்கள் தொடர்பாக உரிய முறையில் அரசு நிர்வாகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு பயனாளிகள் சேர்க்கப்படுவதுண்டு. நிதி உதவி, மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அரசு நலத்திட்டங்கள்
இந்த சலுகைகள் பயனாளிகள் வங்கிக் கணக்கிற்கே தற்போதும் பெரும்பாலும் நேரடியாக வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், அரசு நலத்திட்டங்கள் குறித்து போலியான தகவல்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரப்பப் படுகின்றன. இத்தகைய பொய்யான தகவல்களுடன் குறுஞ்செய்தி நலத்திட்டங்களை பெற ரிஜிஸ்டர் செய்யுமாறு கூறியும் கூட சில மெசேஜ்கள் அனுப்பப்பட்டு அதன் மூலம் மக்கள் அனுப்பும் தகவல்களை பெற்று நிதி மோசடி உள்ளிட்டவை கூட அரங்கேறும் சூழல் உள்ளது.

ரூ.1,80,000 வழங்கப்பட இருப்பதாக
இதனால் போலியான தகவல்களை கண்டறிந்து உண்மை தகவல்களை உறுதி செய்வதற்காக மத்திய அரசின் பிஐபி, பேக்ட் செக் என்ற ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது வதந்திகள் மற்றும் பொய்யான தகவல்களை அடையாளம் கட்டி வருகிறது. அந்த வகையில், அண்மையில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றில், மத்திய அரசின் பிரதான் மந்திரி கன்யா ஆசிர்வாத் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ரூ.1,80,000 வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டு இருந்தது.

பிஐபியின் பேக்ட் செக்
பெண் குழந்தைகளின் பெற்றோரின் வங்கிக் கணக்கில் இந்த பணம் டெபாசிட் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கவர்மெண்ட் கியான் என்ற யூடியூப் சேனலில் இந்த தகவல் வெளியிடப்பட்டு இருந்ந்தது. இந்த வீடியோவை பலரும் தங்களுக்கு ஷேர் செய்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில், பிஐபியின் பேக்ட் செக் ட்விட்டர் பக்கத்தில், இந்த தகவலில் உண்மையில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் இல்லை
இது குறித்து பிஐபி ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், பிரதமரின் கன்யா ஆஷிர்வாத் யோஜனா' திட்டத்தின் கீழ் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் மத்திய அரசு ₹1,80,000 வழங்குவதாக அரசு கியான்' என்ற யூடியூப் சேனலில் கூறப்பட்டுள்ளது. அதில் உண்மையில்லை. இத்தகைய ஒரு திட்டம் மத்திய அரசிடம் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Information was published that under Pradhan Mantri Kanya Aasirwad Yojana scheme of the central government, Rs.1,80,000 will be given to each girl child. It is also said that the money will be deposited in the bank account of the girl child's parents. In this case, BIP said on its Twitter page that this information is false.

Fact Check
வெளியான செய்தி
பிரதமரின் கன்யா ஆஷிர்வாத் யோஜனா' திட்டத்தின் கீழ் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் மத்திய அரசு ₹1,80,000 வழங்குவதாக செய்தி வெளியானது.
முடிவு
இதுபோன்ற திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. எனவே அது போலியான செய்தி.
ரேட்டிங்
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications