Fact check: திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் 9 நாட்கள் விடுமுறையா? உண்மை என்ன?
சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் 9 நாட்கள் விடுமுறை என்று தவறான செய்தி ஒரு பரவி வருகிறது. ஆனால், அது உண்மை இல்லை. 156 பள்ளிகளுக்கு மட்டுமே 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 13 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. திருக்கார்த்திகை தினத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரத்தில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்த ஆண்டு மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் சிறப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
பரவும் செய்தி: இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என்று சில செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உண்மை என்ன?: இது தவறான செய்தி. திருவண்ணாமலை தீபத் திருவிழாவினை முன்னிட்டு 16,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதால் 156 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 08.12.2024 முதல் 16.12.2024 வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. என்று குறிப்பிட்டு பள்ளிகளின் பட்டியலையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள 156 பள்ளிகளில் போலீசார் தங்க உள்ளதன் காரணமாக, அந்தப் பள்ளிகளுக்கு இன்று முதல் டிசம்பர் 16 வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர். மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி 156 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியலையும் வெளியிட்டு அறிவிப்பு செய்துள்ளார் முதன்மைக் கல்வி அலுவலர்.

Fact Check
வெளியான செய்தி
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று முதல் 9 நாட்கள் விடுமுறை என்று தவறான செய்தி ஒரு பரவி வருகிறது.
முடிவு
திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், 156 பள்ளிகளில் தங்க உள்ளதன் காரணமாக, அந்த 156 பள்ளிகளுக்கு மட்டும் இன்று முதல் டிசம்பர் 16 வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்
ரேட்டிங்
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications