Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Fact Check: பிரசவத்தின்போது தாய்மார்களின் இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் உயர்ந்துள்ளதா? உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரசவத்தின்போது தாய்மார்களின் இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் அதிகரித்து உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இது வதந்தி என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக பிரசவத்தின்போது தாய்மார்களின் இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் உயர்ந்துள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வந்தது. தமிழக மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதும் இதற்கு ஒரு ஒரு காரணம் எனக் குற்றம்சாட்டப்பட்டது.

fact check tamil nadu chennai

வதந்தி: 'கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தாய்மார்களின் இறப்பு விகிதம் (MMR) அதிகரித்துள்ளது' என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

உண்மை என்ன?: இது முற்றிலும் பொய்யான தகவல் என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பிரசவத்தின் போது ஒரு லட்சம் பேரில் 134 ஆக இருந்த தாய்மார்களின் இறப்பு விகிதம் (MMR) கடந்த 2018-20ல் 54 ஆகக் குறைந்து தற்போது 2023-24ல் 45.5 ஆக குறைந்தே இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் தாய்மார்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகப் பொய்யான தகவல் பரப்பப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

fact check tamil nadu chennai

இதற்கு ஆதரமாக, மத்திய அரசின் சார்பில் மாநில வாரியாக வெளியிடப்பட்ட தாய்மார்களின் இறப்பு விகிதம் (MMR) பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

Fact Check

வெளியான செய்தி

கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தாய்மார்களின் இறப்பு விகிதம் (MMR) அதிகரித்துள்ளது என செய்தி பரவியது.

முடிவு

இது வதந்தி. 2001 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பிரசவத்தின் போது ஒரு லட்சம் பேரில் 134 ஆக இருந்த தாய்மார்களின் இறப்பு விகிதம் (MMR) 2023-24ல் 45.5 ஆக குறைந்துள்ளது.

ரேட்டிங்

Mostly False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+