Fact check: 3,000 ஓட்டு வித்தியாசத்தில் ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங்கை ஜெயித்தரா? உண்மையில் என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஏராளமான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரும் அரசியல் தலைவரின் மகன் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் இல் எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஆர்ம்ஸ்ட்ராங் இடம் வெறும் 3000 ஓட்டு வித்தியாசத்தில் மட்டுமே வென்றார் என்ற ஒரு செய்தி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையானதா? என பார்க்கலாம்..
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதை அடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டது. இதனால் அங்கு வழக்கறிஞர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கூடியதால் பரபரப்பான சூழல் நிலவியது.
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை கண்டித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கைகள் வெளியிட்டனர். இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலையாளிகளாக சரணடைந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது.
சரணடைந்த பொன்னை பாலு சுரேஷின் சகோதரர் என்பது தெரிய வந்திருக்கும் நிலையில் ஆற்காடு சுரேஷின் நினைவு நாள் அல்லது பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல திட்டமிட்டதாகவும் தற்போது பிறந்த நாளிலேயே அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைதாகியுள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் உடற் கூறு ஆய்வுக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய திருவேங்கடம் போலீஸ் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது.
அந்த வகையில்,'சென்ற சட்டமன்றத் தேர்தல் - பெரும் அரசியல் தலைவரின் மகன் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் இல் எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஆர்ம்ஸ்ட்ராங் இடம் வெறும் 3000 ஓட்டு வித்தியாசத்தில் மட்டுமே வென்றார். 2026 லும் இதே நிலைமை இருக்குமா? இப்போது புரிகிறதா? படுகொலை பின்னணி?" என ட்விட்டரில் தமிழச்சி என்ற அக்கவுண்டில் இருந்து ஒரு செய்தி பகிரப்பட்டு இருக்கிறது இது தொடர்பாக தேர்தல் ஆணைய தரப்புகளை சோதித்துப் பார்த்தபோது இது பொய்யான தகவல் என தெரிய வந்திருக்கிறது.

2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஆனால் அவரை எதிர்த்து ஆம்ஸ்ட்ராங் போட்டியிடவில்லை 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தான் ஆம்ஸ்ட்ராங் முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு இருந்தார் ஆனால் 3000 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஆம்ஸ்ட்ராங்கை ஸ்டாலின் தோற்கடித்தார் என்பது பொய்யான செய்தியாகும்.
2011 தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்த்து, அந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த அதிமுக சார்பில் சென்னை மேயராக இருந்த சைதை துரைசாமி போட்டியிட்டு இருந்தார். இந்த தேர்தலில் மு.க. ஸ்டாலின் 68,570 வாக்குகள் பெற்றிருந்தார். அடுத்ததாக சைதை துரைசாமி 65 ஆயிரத்து 921 வாக்குகளை பெற்றிருந்தார். தற்போது படுகொலை செய்யப்பட்டிருக்கும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெறும் 42 ஓட்டுகளை மட்டுமே பெற்றிருந்தார்.
அந்த வகையில் துரைசாமியை ஸ்டாலின் தான் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தார். ஆம்ஸ்ட்ராங் பெற்ற வாக்குகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் பெற்ற வாக்குகளுக்கும் சுமார் 64,000 வாக்குகள் வித்தியாசம் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதன் மூலம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தி போலியானது.

Fact Check
வெளியான செய்தி
சென்ற சட்டமன்றத் தேர்தல் - பெரும் அரசியல் தலைவரின் மகன் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் இல் எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஆர்ம்ஸ்ட்ராங் இடம் வெறும் 3000 ஓட்டு வித்தியாசத்தில் மட்டுமே வ
முடிவு
துரைசாமியை ஸ்டாலின் தான் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தார். ஆம்ஸ்ட்ராங் பெற்ற வாக்குகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் பெற்ற வாக்குகளுக்கும் சுமார் 64,000 வாக்குகள் வித்தியாசம் இருப்பது த
ரேட்டிங்
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications