FACT CHECK: நெதன்யாகுவை தீவிரவாதி என்று எழுதப்பட்ட போஸ்டரை சார்லஸ் மன்னர் வெளியிட்டாரா?
லண்டன்: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 40,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை எதிர்த்து பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப்படி இருக்கையில், பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், நெதன்யாகுவை தீவிரவாதி என்று குறிப்பிடும் போஸ்டரை வெளியிட்டுள்ளதாக வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
யார் இந்த நெதன்யாகு?: இஸ்ரேலின் தற்போதைய பிரதமராக நெதன்யாகு இருந்து வருகிறார். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் நீண்ட காலமாக பஞ்சாயத்து இருந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ், எதிர்பாராத நேரத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெதன்யாகு போரை அறிவித்தார். ஹமாஸை ஒழிப்பதுதான் நோக்கம் என்று சொன்னாலும் இந்த போரில் 42,000க்கும் அதிகமான பொதுமக்கள் 128-139 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவை அனைத்திற்கும் பொறுப்பு நெதன்யாகுதான்.

போராட்டம்: நெதன்யாகுவின் போரை எதிர்த்தும், அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டக்காரர்கள், உண்மையான தீவிரவாதி ஹமாஸ் கிடையாது.. நெதன்யாகுதான் என்று குற்றம்சாட்டியுள்ளனர். போராட்டம் காரணமாக ஐநா மன்றத்திலும் போர் நிறுத்தம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் நெதன்யாகு போரை நிறுத்தவில்லை.
வீடியோ: இந்த போரில் தற்போது லெபனானும் உள் இழுக்கப்பட்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்புக்கு லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா ஆதரவளிப்பதாக கூறி, இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. நெதன்யாகு கட்டுக்கடங்காத போர் வெறியை கொண்டிருப்பதாக பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இப்படி இருக்கையில்தான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
சார்லஸ் மன்னர்: இந்த வீடியோவில், பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் போஸ்டர் ஒன்றை வெளியிடுகிறார். அந்த போஸ்டரில், நெதன்யாகு என்பவர் தீவிரவாதி என்றும், அவரை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக ஷேராகி வருகிறது. வீடியோவின் உண்மை தன்மையை ஊடகங்கள் சரிபார்க்கையில், இது போலி வீடியோ என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த மே மாதம் 14ம் தேதியன்று லண்டன் பக்கிங்காம் அரண்மணையில் மூன்றாம் சார்லஸ், மன்னராக முடிசூடிக்கொண்டார். அப்போது தனது உருவப்படத்தை அவர் திறந்து வைத்தார். இந்த வீடியோவை எடுத்து எடிட் செய்து, நெதன்யாகுவை தீவிரவாதியாக காட்டப்பட்டிருக்கிறது.

Fact Check
வெளியான செய்தி
நெதன்யாகுவை தீவிரவாதி என்று குறிப்பிட்டுள்ள போஸ்டரை, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் வெளியிட்டார்
முடிவு
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது உருவப்படத்தை திறந்து வைத்த வீடியோவை எடிட் செய்து தவறாக பரப்பியுள்ளனர்.
ரேட்டிங்
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications