Fact Check: கோயிலில் வழிபாடு நடத்தியவர்கள் மீது தமிழக காவல்துறை தடியடி நடத்தியதா? உண்மை என்ன
சென்னை: கோயிலில் வழிபாடு நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தப்படுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில் இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து தமிழ்நாடு உண்மைச் சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. இதில், கோயிலில் வழிபாடு நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தப்படுவதாக பரப்பப்படும் வீடியோவானது 2020 ஆம் ஆண்டு கொரோனா கால காணொளி என விளக்கம் அளித்துள்ளது.
தற்போதைய நவீன காலத்தில் அனைவரது கையிலும் செல்போன் வந்துவிட்டது. அதோடு இணைய ஸ்பீடும் அதிகமாக வந்துள்ளது. இதனால் எந்த ஒரு செய்தியும் நொடிப்பொழுதில் தங்களது கைகளுக்குள் வந்துவிடுகிறது. எவ்வளவு பெரிய விஷயம் நடந்தாலும் அது தொடர்பான தகவல்களை உடனுக்குடன் நம்மால் தெரிந்துகொள்ள முடிகின்றது.

தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு
அவ்வளவு வேகமாக தொழில்நுட்பம் முன்னேற்றம் கண்டுள்ளது. எனினும் இவற்றில் போலி செய்திகளும் வேகமாக பரவுவதற்கு வழி வகுத்து விடுகின்றன. சமூக வலைத்தளங்களில் உண்மை செய்தியை விட போலி செய்திகளே அதிகம் பரவுகின்றன என்ற ஒரு கருத்தும் பரவலாக இருந்து வருகிறது. இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 499-ன் படி அவதூறு என்பது குற்றமாகும்.
இந்த நிலையில் தான் தமிழக அரசு, பொய்யான தகவல்கள் மற்றும் தவறான புரிதல்கள், வதந்திகளை கட்டுப்படுத்துவதற்காக "தமிழ்நாடு உண்மைச் சரிபார்ப்பு குழு (TN Fact Check)" என்ற ஒன்றை அமைத்துள்ளது. சமூக ஊடகங்கள், வாட்ஸ்அப், யூ-டியூப் உள்ளிட்ட பல தளங்களில் விரைவாக பரவும் தவறான செய்திகளை மக்கள் நம்பி ஏமாறாமல் இருக்க இது தொடர்பான உண்மைத் தன்மையை இந்த குழு ஆராய்ந்து கூறும்.
பக்தர்கள் மீது போலீசார் தடியடி
இதனால் போலி செய்திகள் பரப்பப்படுகிறது தடுக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக உண்மை சரிபார்த்த தகவலை வெளியிடும் பொறுப்பை இந்த குழு மேற்கொண்டு வருகிறது. இந்த குழுவானது அரசுத் திட்டங்கள், அரசு நடவடிக்கைகள், சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய செய்திகள் உள்ளிட்டவற்றை பற்றிய சந்தேகங்கள் எழுந்தாலோ அல்லது பொய்யான தகவல்கள் பரவினாலோ அவற்றை ஆய்வு செய்து உண்மையை வெளியிடுகிறது.
அந்த வகையில் தான் தற்போது கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்த பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்துவதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோவிற்கு தலைப்பாக, இதுபோல் எங்காவது மசூதிகளிலோ, சர்ச்சுகளிலும் பக்தர்களை அடித்தது போன்ற வீடியோவை காவல்துறை வெளியிடுமா? என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
மேலும் ஹிந்துக்கள் தான் இங்கு தன் தவறை திருத்திக் கொள்ள வேண்டும். ஹிந்து விரோத அரசிற்கு இனி எந்த காலத்திலும் வாக்களிக்காமல் இருந்தால் தான் சரியாக இருக்கும் என்று பதிவிட்டு, அந்த வீடியோவில் காவல்துறையினர் இந்து கோயிலுக்குள் சென்று வழிபடும் பக்தர்களை தடியால் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி இருந்தது.
இந்த வீடியோ சமூகத்தில் அமைதியை குலைக்கும் வகையிலும், மத பிரச்சினையை தூண்டும் வகையிலும் இருந்ததாலும், வேகமாக இந்த வீடியோ பரவியதாலும், தமிழ்நாடு உண்மைச் சரிபார்ப்பு குழு (TN Fact Check)" இது குறித்த உண்மைத் தன்மையை வெளியிட்டுள்ளது.
தற்போது பரப்பப்படும் இந்த வீடியோவானது கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இப்போது நடந்ததுபோல பரப்பப்படுவது போலியானது என்றும் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீறியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர் என்று விளக்கப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
கோயிலுக்குள் சென்று வழிபடும் பக்தர்கள் மீது தடியடி என வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
முடிவு
கோயிலில் வழிபாடு நடத்தியவர்கள் மீது தடியடி என்று பரப்பப்படும் 2020 ஆம் ஆண்டு கொரோனா கால காணொளி என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications