பிரதமரின் இலவச மடிக்கணினி திட்டம்..இளைஞர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுகிறதா..பரவும் தகவல்..உண்மை என்ன?
டெல்லி: பிரதமரின் இலவச மடிக்கணினி திட்டம் 2023-ன் கீழ் இளைஞர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையா? என்று இங்கே விரிவாக பார்க்கலாம்.
தகவல் தொழில் நுட்ப வசதி பெருகி விட்ட இந்த கால கட்டத்தில் எந்த ஒரு தகவலாக இருந்தாலும் மக்களிடையே எளிதில் சென்றடைகிறது. வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள், அரசின் நலத்திட்டங்கள் என எந்த ஒரு தகவலாக இருந்தால் சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் என பல வழிகளில் மக்களை அடுத்த சில மணி நேரங்களில் சென்றடைகிறது.

இதனால், அரசின் நலத்திட்டங்களை மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறுவது எளிதாகும். திட்டங்கள் குறித்த முழு தகவல் மற்றும் திட்டத்தின் கீழ் யாருக்கு பலன் கிடைக்கும் என்பதையும் மக்கள் நன்கு அறிந்து கொள்ள முடிகிறது. இப்படி நன்மைகள் பல இருந்தாலும் ஒரு பக்கம் சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி போலியான பொய்யான தகவல்களும் அதிகம் பரப்பி விடப்படுகின்றன.
அதுவும் வாட்ஸ் அப் போன்ற பார்வேடுகளில் உண்மை தகவலை விட பொய் தகவலே அதிவேகத்தில் பரவுகிறது என்றால் மிகையல்ல. போலி தகவல்களை மக்களிடையே விவரங்களை பணம் பறிக்கும் மோசடிகள் கூட இதன் மூலம் நடைபெறுகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் இல்லாவிட்டால் நிதி இழப்புகளுக்கு ஆளாக நேரிடுகிறது.

அந்த வகையில், தான் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பிரதமரின் இலவச மடிக்கணினி திட்டம் 2023-ன் கீழ் இளைஞர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்பட இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும் தங்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலருக்கு அனுப்பி வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இலவச லேப்டாப் கொடுக்கப்படுவதாக பரவும் தகவலில் உண்மையில்ல்லை என்று பிஐபி பேக்ட் செக் கூறியுள்ளது.
இது தொடர்பாக பிஐபி பேக் செக் ட்விட்டர் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில், மத்திய கல்வி அமைச்சகத்தின் தரப்பிலோ.. மத்திய அரசின் தரப்பிலோ.. அது போன்ற எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப் படவில்லை என்று பிஐபி விளக்கம் அளித்துள்ளது. எனவே, இத்தகைய தகவல்கள் வந்தால் மக்கள் புறந்தள்ளுவதோடு அவற்றை நண்பர்களுக்கும் அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

Fact Check
வெளியான செய்தி
பிரதமரின் இலவச மடிக்கணினி டிட்டம் 2023-ன் கீழ் இளைஞர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுவதாக இணையத்தில் செய்தி வெளியாகி வருகிறது.
முடிவு
இந்த செய்தியில் உண்மையில்லை. மத்திய அரசிடம் இது போன்ற எந்த திட்டமும் இல்லை.
ரேட்டிங்
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications