தவெக அமைச்சரவையில் சிபிஎம் இடம்பெறுமா? பெ.சண்முகம் கொடுத்த பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் இடம்பெறுவதில்லை என்ற நிலைப்பாட்டில் சிபிஎம் உறுதியாக இருப்பதாக பெ.சண்முகம், ஒசூரில் இருந்து சிபிஐ கட்சியைச் சேர்ந்தவர் அமைச்சரவாக வாய்ப்பு என்று வீரபாண்டியன் ஏன் கூறினார் என்பதை அவரிடமே கேட்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தவெக ஆட்சி அமைக்க சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளது. அதேபோல் காங்கிரஸ், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகளிடமும் அமைச்சரவையில் இடம்பெற தவெக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இரு கட்சிகளும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தன.

CPM

இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரியில் சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கிருஷ்ணகிரி மண்ணில் இருந்து கூட கம்யூனிஸ்ட் தோழர்கள் அமைச்சர்களாக வருவார்கள். அதற்கான காலம் நெருங்குகிறது என்று தெரிவித்தார். இதனால் சிபிஐ எம்எல்ஏ ராமச்சந்திரன் விரைவில் அமைச்சராவார் என்ற பேச்சுகள் எழுந்தன.

இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் முதல்வர் விஜய்யை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இனாம் நிலம் தொடர்பாக தமிழக அரசு புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. கரூரில் இனாம் நிலத்தை பதிவு செய்ய அனுமதித்து முதல்வர் விஜய் துணிச்சலான நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கு பாராட்டுக்கள்.

4 கிராமத்திற்கு என்றாலும், தமிழ்நாடு முழுவதும் இனாம் நிலங்களில் வசிக்கக்கூடிய வகையில் தமிழக அரசு தனி ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். அதேபோல் குதிரை பேரத்தில் யார் ஈடுபட்டாலும் கடுமையான கண்டிக்கத்தக்க விஷயம். பொதுமக்களுக்கு கோபம் வர வேண்டும்.

நாங்களும் கண்டிக்கதான் செய்கிறோம்.. ஆனாலும் இவர்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைகிறார்கள். எம்எல்ஏ-க்களுக்கு எதிரான தொகுதி மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அதேபோல் தவெக அமைச்சரவையில் சிபிஎம் கட்சி கட்டாயமாக இடம்பெறாது. கிருஷ்ணகிரி மண்ணில் இருந்து ஒருவர் அமைச்சராக வருவார் என்று சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் நேற்று பேசினார்.

எதன் அடிப்படையில் அப்படியொரு கருத்தை கூறினான் என்று அவரிடம் இன்று கேட்க உள்ளேன். அமைச்சரவையில் நாங்கள் இடம்பெற மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்று கூறி இருந்த வீரபாண்டியன், பின்னர் திடீரென சூழலை பொறுத்து முடிவு செய்வோம் என்றும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+