Fact check: "கற்புக்கரசி" என்பதாலா கண்ணகிக்கு சிலை வைக்கப்பட்டது? டாக்டர் ஷாலினி பேச்சும், உண்மையும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கற்புக்கரசி என்பதால் கண்ணகிக்கு மெரினா கடற்கரையில் சிலை வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறிய மருத்துவர் ஷாலினி விமர்சனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது குறித்த உண்மை தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தமிழறிஞர்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சனிக்கிழமையன்று பிரபல மனநல மருத்துவரான ஷாலினி சிறப்புரையாற்றியிருந்தார். அவர் கண்ணகி குறித்து பேசியிருந்த கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Kannagi Anna Shalini

ஷாலினி பேசியதாவது, “காதல் விவகாரத்தில் சிறுமி ஒருவருக்கு சிகிச்சையளிக்கும்போது, சிறுமி கண்ணிகியை மேற்கோள் காட்டி அவரை போல கற்புக்கரசியாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். கண்ணியை கற்புக்கரசி என சிலையெல்லாம் வைக்கிறீர்கள். எங்களுக்குதான் அது பிரச்னையாக இருக்கிறது. நீங்கள் சிலை வைத்துவிட்டு போய்விடுகிறீர்கள். ஆனால், 13-14 வயது சிறுமியை மீண்டும் சரி செய்து கொண்டு வருவதற்கு எங்களுக்கு வில்லியே கண்ணியாகத்தான் இருக்கிறார்.

மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை வைக்கப்படும்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு ஒருவர் மட்டும் கடிதம் எழுதியிருக்கிறார். இப்படிப்பட்ட மோசமான ரோல்மாடலை சின்ன பசங்களுக்கு முன்னுதாரணமாக வைத்தால், 20-30 வருடங்கள் கழித்து தமிழ்நாட்டு பெண்கள் எல்லாம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள் என ஒரேயொருவர் மட்டும், பெரியார் மட்டும் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கண்ணகி குறித்து விமர்சனங்கள் இருந்தாலும், பெணாக இருந்து ஒருவர் மன்னனை பார்த்து 'தேரா மன்னா' என்று கூப்பிட்டுவிட்டாளே என்பதால் சிலை வைத்திருக்கிறார்கள்” என்று பேசியிருக்கிறார். முழுமையான வீடியோவை காண (https://www.youtube.com/watch?v=J7J4f_ZrBKk)

இப்படி இருக்கையில் கண்ணகி சிலையை வைத்தது அறிஞர் அண்ணா என்றும், அவர் அந்த சிலையை வைத்ததற்கான காரணம் வேறு என்றும் பல்வேறு தரப்பினரும் மருத்துவர் ஷாலினியின் கருத்துக்கு பதிலளித்து வருகின்றனர்.

குறிப்பாக ஷாலினி பங்கேற்ற இந்த கூட்டத்தில், பார்வையாளர் ஒருவர், “தன்னுடைய கணவனை மன்னன் கொன்றுவிட்டான், தன்னையும் கொன்றுவிட்டால் கேட்க ஆள் இல்லை என்று என்று அஞ்சாமல், மன்னன் செய்தது தவறு என்பதை சுட்டிக்காட்டவே அரண்மனைக்குள் நுழைந்து மன்னனை நேருக்கு நேர் சந்தித்து தேரா மன்னா என்று கேட்டிருக்கிறார்.

அதுபோல தமிழ்நாட்டை யார் ஆண்டாலும், ஆட்சியாளர்கள் தவறிழைத்தால் நேருக்கு நேர் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் கண்ணகி சிலை வைக்கப்படுவதாக அண்ணா உலகத்தமிழ் மாநாட்டில் பேசியிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

அதேபோல சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் அண்ணா பேசிய உரையின் சுருக்கமும் சோஷியல் மீடியாக்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த உரையில் கற்புக்காக சிலை வைக்கவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

“'தயங்காதே தமிழா' மயங்காதே தமிழா! என்ற பாடங்களோடு, தமிழர் திண்ணியர் ஆகவும் வேண்டும். அவ்விதம் திண்ணியரானால் உலகில் அவர்கள் எடுக்கின்ற காரியங்கள் அனைத்தும் வெற்றியோடும் முடியும் என்ற நம்பிக்கையை -நாதம் நிறைந்த பாடத்தைப் பெற்றால், நம்மை உலகிற்கு யார் என்று அறிவிக்கும் நாளும் வரும். அந்த உறுதியைப் பெறப் பழம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி கண்ணகியைப் பார்த்தால் தெரியும்!

நீதி கேட்டுக் கண்ணீர் உகுத்தவாறு கையில் காற்சிலம்போடு அரசவை சென்று வாயிலோனை அழைத்து - அறிவு அறை போகிய அரசனே' என்று நெடுஞ்செழியப் பாண்டியனையே அறைகூவி அழைத்தாள் உள்ள உறுதி இருந்த காரணத்தால்! இத்தனைக்கும் அவள் கணவனை இழந்த காரிகைதான்! கணவன் இறந்தான் என்றதும் அழுது புலம்பாமல் - இன்னும் சிறிதுகாலம் பிழைத்திருக்கலாம், மறுவாழ்வு வாழலாம் என்று நினையாமல் - நீதிக்ககுப் போராடிய சோழ வளநாட்டின் பத்தினித் தெய்வம் அல்வவா கண்ணகி!

கணவனை இழந்தபோதும் அவன் பெயருக்கு மட்டும் மாசு சூழ்ந்திட விடமாட்டேன் என வஞ்சினம் பூண்டு, அரசவை சென்று அறிவு அறை போகிய மன்னா என்று முரசறைந்தாளே - அந்தத் தமிழினத்தின் பத்தினித் தெய்வம் தரும் வீர உணர்ச்சி நாம் பெறாத காரணம் என்ன? இதைத்தான் கடற்கரையில் கண்ணகியின் சிலை திறந்த காட்சியும் மாட்சியும் நமக்குப் போதிக்கின்றன. கணவனை இழந்த ஒரு பெண் அறிவைத் தவிர வேறொன்றும் துணையில்லாதவள் - மன்னனையே பார்த்து

'அறிவு அறை போகிய மன்னா!" என்று அழைக்கும் அந்நாள் உணர்ச்சியை எழுச்சியை - நாம் மீண்டும் பெறவேண்டும். தமிழ் மாநாடு தருகின்ற நற்செய்தி நாம் உலகிற்குத் தர முடிந்தது இந்த அறிவுச் செல்வத்தைத்தான் அதுதான் கொடுக்க குறையாத செல்வம்! இந்தப் பத்து நாட்களாகக் கண்ட எழில்மிகு காட்சிகளையும் - உலாவையும் விழாவையும் அதனால் ஏற்பட்ட அகப் பொலிவையும் முகப்பொலிவையும் நல்லோர்க்கெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள்.

எல்லோருக்கும் இந்தத் தமிழ் மாநாடு தரும் இனிய செய்தியை எடுத்துச் சொல்லுங்கள் இதனைக் கேட்டு நல்லவர்கள் ஆகிறவர்களும் ஆகலாம். இத்தகைய நற்செய்தியை எடுத்துச் செல்லும் திருத்தூதர்களாய் நீங்கள் சென்று வாருங்கள் வென்று வாருங்கள் தமிழகத்திற்கு வளம் சேர்த்துத் தாருங்கள்” என்று பேசியிருக்கிறார்.

Fact Check

வெளியான செய்தி

கற்புக்கரிசி என கண்ணகிக்கு சிலை வைக்கிறீர்கள் என்று மனநல மருத்துவர் ஷாலினி கூறியிருந்தார்.

முடிவு

பெண்ணாக இருந்து மன்னனை எதிர்த்து கேள்வி கேட்ட வீரத்திற்காகவே கண்ணகிக்கு சிலை வைக்கப்பட்டிருப்பதாக அண்ணா கூறியுள்ளார்.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+