"திமுக, அதிமுக வெட்கப்பட வேண்டும்!" சென்னை வெள்ளம்.. தீயாக பரவும் சத்யராஜ் போட்டோ! உண்மை என்ன
சென்னை: மிக்ஜாம் சென்னையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் திமுக, அதிமுக அரசை விமர்சிக்கும் வகையில் சத்யராஜின் போட்டோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது உண்மைதானா என்பதைப் பார்க்கலாம்.
மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த ஞாயிறு இரவு ஆரம்பித்த மழை செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை கொட்டித் தீர்த்தது. இடைவிடாமல் பெய்த மழையால் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

குறிப்பாகப் புயல் சமயத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருந்த நிலையில், வெள்ளத்தைக் கடல் உள்வாங்கவில்லை. இதுவும் கூட சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்க முக்கிய காரணமாக இருந்தது.
கனமழை: கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெய்த மழையே இந்தளவுக்குப் பாதிப்பு ஏற்படக் காரணமாக இருந்துள்ளது. அடையாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 500-550 மிமீ மழையும், upstream பகுதிகளில் 400-450 மிமீ மழையும் பெய்துள்ளது. இவை 24 மணி நேரத்தில் பெய்ததே பாதிப்பு மோசமாகக் காரணமாகும்.
அடையாறு நீர் பிடிப்பு பகுதிகள் மட்டுமின்றி கூவம் செல்லும் பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. மேலும், நவம்பர் மாதம் முதலே நல்ல மழை பெய்தது மண்ணை அதிக ஈரப்பதம் கொண்டதாக மாற்றியதால் மண்ணால் அதிகளவில் நீரை உறிஞ்ச முடியவில்லை.
மோசமான பாதிப்பு: இதன் காரணமாகக் குறிப்பிட்ட பகுதி என்று இல்லாமல் ஒட்டுமொத்த நகரமும் மூழ்கியது. மழை நின்றவுடன் மீட்புப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. அமைச்சர்கள் உதயநிதி, மா.சு, சேகர்பாபு, தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் மீட்புப் பணிகளைக் கவனித்து வருகிறார்கள். அதேபோல குறிப்பாக முதல்வர் ஸ்டாலினும் நேரடியாக மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், முக்கிய சாலைகளில் நீர் வடிந்துவிட்ட போதிலும் உட்புற சாலைகளில் நீர் தேங்கியே இருக்கிறது. மேலும், சில இடங்களில் இன்னும் மின்சாரமே வழங்கப்படவில்லை. அத்தியாவசிய பொருட்களே பெறுவதிலேயே சிக்கல் இருப்பதாகவும் சொல்லி பல்வேறு இடங்களிலும் போராட்டங்களும் ஒரு பக்கம் நடந்தே வருகிறது. இணையத்திலும் கூட திமுக அரசை விமர்சித்தும் பாராட்டியும் பல ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.
சத்யராஜ்: இதற்கிடையே நடிகர் சத்யராஜ் போட்டோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் திமுக மற்றும் அதிமுக என இரு அரசுகளையும் விமர்சிக்கும் வகையிலான வாசங்கள் இடம்பெற்றுள்ளது.
அதில் "சென்னை வெள்ளம், சென்னைவாசிகளுக்கு 6 லட்சம் கோடி பொருளாதார இழப்பு, உழைப்பு திறன் வீண், மன உளைச்சல், 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த திமுக, அதிமுக வெட்கப்பட வேண்டும்" என்ற வாசகம் இருக்கிறது. இது இணையத்தில் வேகமாகப் பரவும் நிலையில், இது உண்மையா பொய்யா என்ற கேள்விக்கும் பலருக்கும் எழுந்தது.

உண்மை என்ன: இது குறித்து நாம் ஆய்வு செய்து பார்த்தோம். அதன்படி இந்த படத்தை நாம் ரிவர்ஸ் சேர்ச் செய்யும் போது இது போலியான படம் என்பது உறுதியானது. சத்யராஜ் இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடர்பாக போட்டோவை வெளியிட்டிருந்தார். அதைத்தான் சிலர் மாற்றி இப்படி இணையத்தில் போலியாகப் பரப்பி வருகிறார்கள்.
உண்மையான போட்டோவில், "போர் வேண்டாம். பாலஸ்தீனத்தில் குழந்தைகளைக் கொல்லும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுப்போம்... நவ. 17 முதல் நவ. 23 வரை போர் எதிர்ப்பு வாரம்" என்பது போன்ற வாசங்கள் இடம்பெற்றுள்ளது. ஆனால், இதைத்தான் இப்போது போலியாக மாற்றிப் பரப்பி வருகிறார்கள்.

Fact Check
வெளியான செய்தி
புயல் பாதிப்புகள் குறித்து திமுக மற்றும் அதிமுக அரசை விமர்சித்து சத்யராஜ் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
முடிவு
அது போலியான படம்.. இஸ்ரேல் ஹமாஸ் போர் சமயத்தில் வெளியிட்ட படத்தை எடிட் செய்து சிலர் பரப்பி வருகிறார்கள்.
ரேட்டிங்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications