“தமிழகத்தின் நோதாஜி” அண்ணாமலை.. சுவர் விளம்பரம் உண்மையா? இதை கவனிக்காமல் விட்டுட்டீங்களே -Fact Check
தேர்தல் சுவர் விளம்பரத்தில் “தமிழகத்தின் நோதாஜி” அண்ணாமலை என்று பிழையாக குறிப்பிட்டு உள்ளதாக சமூக வலைதளங்கள் புகைப்படம் பகிரப்படுகிறது
சென்னை: தமிழ்நாட்டின் நோதாஜி அண்ணாமலை என்று தேர்தலுக்காக எழுதப்பட்டு இருக்கும் சுவர் விளம்பரத்தில் பிழையாக குறிப்பிடப்பட்டு இருப்பதாக புகைப்படத்துடன் பலர் மீம்களை வெளியிட்டு விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் இருப்பதுபோல் நோதாஜி என்று குறிப்பிட்டது உண்மையா? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக அதிகளவில் டிரெண்ட் செய்யப்பட்டு மீம் கிரியேட்டர்களால் கேலி செய்யப்பட்ட புகைப்படம் என்றால் அது பாஜகவின் வாக்களிக்கக்கோரி எழுதப்பட்டு இருக்கும் சுவர் விளம்பரம்தான்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்துடன், தாமரை சின்னம் வரையப்பட்ட அந்த சுவர் விளம்பரத்தில் "தமிழகத்தின் நோதாஜி அண்ணாமலை" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

நோதாஜி சுபாஷ் சந்திர போஸ்
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய விடுதலைக்காக பிரிட்டிஷ் காரர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராட படைத் திரட்டிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காலத்தால் அழிக்க முடியாத வீரராக திகழ்ந்து வருகிறார். இந்தியாவில் வீரத்துக்கு எடுத்துக்காட்டாக சுபாஷ் சந்திர போஸை மக்கள் குறிப்பிடுவதும், தலைவர்களை இக்காலத்தின் நேதாஜி, தமிழ்நாட்டின் நேதாஜி என்று எழுதுவது வழக்கம்.

தமிழகத்தின் நோதாஜி
அந்த வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை போற்றும் வகையில் அவரது புகைப்படம் மற்றும் தாமரை சின்னத்துடன் "தமிழகத்தின் நேதாஜி அண்ணாமலை" என்று குறிப்பிடப்பட்டு உள்ள புகைப்படம் தற்போது மீம் கிரியேட்டர்களால் அதிகளவில் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் "நேதாஜி" என்று குறிப்பிடுவதற்கு பதில் "நோதாஜி" என்று பிழையாக குறிப்பிடப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
|
நோட்டாவும் பாஜகவும்
ஆர்கேநகர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளை பெற்று படுதோல்வியடைந்த நிலையில், அண்ணாமலையை நோதாஜி என்று குறிப்பிட்டு உள்ள சுவர் விளம்பர படத்தை ஒப்பிட்டு ஒருவர் ட்விட்டரில் திமுக மதுரை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி மண்டல பொறுப்பாளர் பிரபு சந்திரன் மீம் வெளியிட்டு உள்ளார்.

டிரெண்டான ஹேஷ்டேக் -
இந்த புகைப்படத்தை வைத்து #BJPNotaji என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகும் அளவுக்கு மீம்கள் அதிகளவில் பகிரப்பட்டன. திமுக ஐடி விங்கை சேர்ந்தவர்கள், திமுக கூட்டணி கட்சியினர், நெட்டிசன்கள், மீம் கிரியேட்டர்கள் என பலர் இந்த புகைப்படத்தை பகிர்ந்து அதில் உள்ள எழுத்து பிழையை விமர்சித்து வந்தனர்.
உண்மையான படமா?
ஆனால், அந்த படத்தின் உண்மைத் தன்மை குறித்து ஒன் இந்தியா சார்பில் நாம் ஆராய தொடங்கினோம். அப்போது அந்த படத்தை ஜூம் செய்து பார்த்தபோது அது எடிட் செய்யப்பட்ட புகைப்படமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. காரணம், "நோ"வில் இருக்கும் துணைக்கால் எழுத்து வடிவம் மற்றும் வித்தியாசமாக இருந்தது. அத்துடன் அந்த துணைக்கால் பகுதி மட்டும் கட்டமாக ஒட்டு போட்டதைபோன்றும், அந்த கட்டத்தில் சுவற்றுன் நிறத்தில் சிறிய வித்தியாசமும் தென்பட்டது.
இதை மேலும் உறுதிப்படுத்த இணையத்தில் நாம் தேடியபோதுதான் வீடியோ ஒன்று கிடைத்தது. அது இந்த சுவர் விளம்பரத்தின் வீடியோ. அதில் மோடியின் படத்துடன் "பாரத பிரதமர் மோடிஜி அவர்களின் சின்னம் தாமரை ஆதரிப்பீர்..." என்றும், அண்ணாமலை படத்துடன் "தமிழகத்தின் நேதாஜி அண்ணாமலையின் சின்னம் தாமரை" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

போலியான படம்
இதன் மூலம் "நோதாஜி அண்ணாமலை" என்று பகிரப்பட்டும் வரும் படம் போலியானது என்பது உறுதியாகிறது. அதே நேரம் அந்த படத்தில், "பட்டி தொட்டியெங்கும்" என்று குறிப்பிடுவது பதிலாக "பட்டி தொட்யெங்கும்" என பிழையாக எழுத்தப்பட்டதை மீம் கிரியேட்டர்கள் கவனிக்கவில்லை. அத்துடன் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் உடுப்பி கே.கங்காதரனின் பெயரும் படமும் உள்ளதால் இது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக எழுதப்பட்ட சுவர் விளம்பரம் இல்லை என்பதும் தெரிகிறது.

Fact Check
வெளியான செய்தி
தேர்தல் சுவர் விளம்பரத்தில் “தமிழகத்தின் நோதாஜி” அண்ணாமலை என்று பிழையாக குறிப்பிட்டு உள்ளதாக சமூக வலைதளங்கள் புகைப்படம் பகிரப்படுகிறது
முடிவு
“நேதாஜி” என்ற வார்த்தையில் “நே” அருகே துணைக்கால் போட்டு எடிட் செய்து பகிர்ந்து உள்ளார்கள்
ரேட்டிங்
-
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications