வலியில் கத்திய பிரியா.. என்ன நடந்தது? பாஜக அமர் பிரசாத் ரெட்டியிடம் போலீஸ் விசாரணையா? உண்மை என்ன?
சென்னை: கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா மரணத்தில் அமர் பிரசாத் ரெட்டியிடம் விசாரணை நடத்தப்படுவதாக செய்தி ஒன்று இணையத்தில் உலவி வருகிறது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் மாணவி பிரியா. 17 வயதான இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு காலில் ஏற்பட்ட சவ்வு பிரச்சனை காரணமாக சமீபத்தில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யப்பட்டது.
அதன்பின் ஒரு கால் அழுகிய நிலையில், அவருக்கு கால் அகற்றப்பட்டது. ஆனால் இந்த சிகிச்சை தோல்வியில் முடிந்தது. கால் அழுகிய நிலையில் மற்ற உறுப்புகளும் செயல் இழந்த காரணத்தால் பிரியா சிகிச்சை பலனின்றி பலியானார்.

மரணம் எப்படி நடந்தது?
இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட இரண்டு மருத்துவர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டு உள்ளனர். கால் நீக்கப்பட்ட பின் அதில் கட்டு போட்டுள்ளனர். இந்த கட்டை மிக மிக இறுக்கமாக இவர்கள் போட்டுள்ளனர். இந்த இறுக்கம் காரணமாக ரத்தம் அங்கேயே கட்டி உள்ளது. அதோடு கட்டு இறுக்கமாக இருந்ததோடு தசை கிழிந்தது. இதனால் அங்கே சீல் வைக்க தொடங்கி உள்ளது. கட்டு உள்ளே சீல் வைத்ததால் மருத்துவர்கள் இதை கவனிக்கவில்லை. இதுவே மரணத்திற்கும் காரணம் ஆகி உள்ளது.

மரணம்
இந்த நிலையில்தான் கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா மரணத்தில் அமர் பிரசாத் ரெட்டியிடம் விசாரணை நடத்தப்படுவதாக செய்தி ஒன்று இணையத்தில் உலவி வருகிறது. பாஜக அமர் பிரசாத் ரெட்டி மாணவி பிரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அவரை நேரில் சென்று சந்தித்தார். மருத்துவமனையை பார்வையிட்டார். அதன்பின் நேற்று மாணவியின் உடலுக்கும் நேரில் சென்று அமர் பிரசாத் மரியாதையை செய்தார்.

அமர் பிரசாத் ரெட்டி
அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் இந்த கொடூரம் நடந்து உள்ளது. அரசு மருத்துவர்கள் சரியாக செயல்படவில்லை. இந்த மரணம் தமிழ்நாடு திமுக அரசை அழிக்காமல் விடாது என்று அமர் பிரசாத் ரெட்டி விமர்சனம் செய்து இருக்கிறார். இந்த நிலையில்தான் திமுகவினர் சிலர் அமர் பிரசாத் ரெட்டியை விசாரிக்க வேண்டும். அவர் மருத்துவமனைக்கு சென்றது ஏன் என்று விசாரணை செய்ய வேண்டும் என்று போஸ்ட் செய்து வந்தனர்.

என்னாச்சு?
இந்த நிலையில்தான் அமர் பிரசாத் ரெட்டியிடம் போலீசார் விசாரணை செய்வதாக செய்தி ஒன்று இணையத்தில் உலவி வருகிறது. நியூஸ் சேனல்களின் கார்டுகளை வைத்து இந்த செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அதில் இரண்டு நாட்களுக்கு முன் அமர் பிரசாத் ரெட்டி அந்த மருத்துவமனைக்கு சென்றார். அவரிடம் இதையடுத்து போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர் என்று கூறப்பட்டு உள்ளது.

ஆதரவு நிர்வாகிகள்
திமுக ஆதரவு நிர்வாகிகள் பலர் இதை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இந்த செய்தி பொய்யானது ஆகும். பாஜக அமர் பிரசாத் ரெட்டி மாணவி பிரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அவரை நேரில் சென்று சந்தித்தது உண்மைதான். ஆனால் இதில் போலீசார் அதிகாரபூர்வ விசாரணை எதையும் நடத்தவில்லை. 2 மருத்துவர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் மட்டுமே விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Fact Check
வெளியான செய்தி
கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா மரணத்தில் அமர் பிரசாத் ரெட்டியிடம் விசாரணை நடத்தப்படுவதாக செய்தி ஒன்று இணையத்தில் உலவி வருகிறது.
முடிவு
இந்த செய்தி பொய்யானது ஆகும். பாஜக அமர் பிரசாத் ரெட்டி மீது போலீசார் அதிகாரபூர்வ விசாரணை எதையும் நடத்தவில்லை.
ரேட்டிங்
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications