FACT CHECK: குக் வித் கோமாளி மணிமேகலை மதம் மாறினாரா? “லவ் ஜிஹாத்” என பரப்பும் பாஜகவினர்! உண்மை என்ன?

செங்கம் பாஜக தகவல் தொழில் நுட்ப பிரிவு என்று ட்விட்டர் கணக்கில் மணிமேகலை மதம் மாறிவிட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான மணிமேகலை இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டதாகவும், இதுதான் லவ் ஜிஹாத் என்றும் சமூக வலைதளங்களில் பாஜக உள்ளிட்ட வலதுசாரியினர் பதிவுகளை வெளியிட்டு வரும் நிலையில், அது குறித்த உண்மையை அலசுவோம்.

விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். சமையலுடன் நகைச்சுவையை கலந்து வழங்கும் அந்த நிகழ்ச்சியில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை.

அதற்கு முன் சன் மியூசில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த இவர், நடன கலைஞர் ஹுசைன் என்பவரை காதலித்து வந்தார். இதற்கு அவரது பெற்றோர் சம்மதிக்காத காரணத்தால் கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

திருமணத்துக்கு பிறகு சன் மியூசிக்கில் இருந்து விலகி விஜய் டிவிக்கு வந்த மணிமேகலை குக் வித் கோமாளி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது நகைச்சுவை உணர்வால் ஏராளமான ரசிகர்களை பெற்றார். தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு முன்னர் அவர் விலகுவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மதம் மாறினாரா மணிமேகலை?

மதம் மாறினாரா மணிமேகலை?

இதனால் அவரது ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதற்கான காரணத்தை இதுவரை தெரிவிக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் குறித்து ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார் என்று சிலர் பகிர்ந்து அவரது கணவரை குற்றம்சாட்டி வருகிறார்கள்.

செங்கம் பாஜக

செங்கம் பாஜக தகவல் தொழில் நுட்ப பிரிவு என்று ட்விட்டர் கணக்கில் மணிமேகலை தலையில் முக்காடு போட்டபடியும், ஹுசைன் தொப்பி அணிந்தபடியும் உள்ள படத்தையும், திருமண கோலத்தில் இருவரும் இருக்கும் படத்தையும், தங்கள் திருமணம் குறித்து மணிமேகலை வெளியிட்ட ட்விட்டர் பதிவின் ஸ்க்ரீன் ஷாட் பகிரப்பட்டு இருக்கிறது.

லவ் ஹிஜாத் எனப்புகார்

லவ் ஹிஜாத் எனப்புகார்

அத்துடன், "மணிமேகலை... எப்படி ஆரம்பிச்சது; எப்படி முடிஞ்சிருக்கு பாத்திங்களா? லவ்_ஜிகாத். மதமேன பிரிந்தது போதும்" என்று பாஜகவின் அந்த ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டு இருக்கிறது. இதனை பாஜக ஆதரவாளர்கள், வலதுசாரிகள் என பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

ஹுசைன் - மணிமேகலை திருமணம்

இதுகுறித்த உண்மையை தேடியபோதுதான், அதில் பகிரப்பட்டு இருக்கும் ஹுசைன் - மணிமேகலையின் திருமண புகைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பகிரப்பட்டது தெரியவந்தது. அந்த புகைப்படத்துடன் "நானும் ஹுசைனும் இன்று திருமணம் செய்துகொண்டோம். திடீர் பதிவுத் திருமணம். அப்பாவை சமாதானப்படுத்த தவறிவிட்டோம்.

காதலுக்கு மதம் இல்லை

தனியாக பிரிந்து திருமணம் செய்துகொண்டோம். இது எங்களின் முடிவு. ஒருநாள் அவர் எங்களை புரிந்துகொள்வார் என்று உறுதியாக நம்புகிறேன். காதலுக்கு மதம் இல்லை. நான் ஹுசைனை விரும்புகிறேன். ஸ்ரீராம ஜெயம். அல்லாஹ்." என்று பதிவிட்டு தங்கள் திருமணத்தை வெளிப்படையாக அறிவித்தார்.

ரம்ஜான் கொண்டாட்டம்

அதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் ரம்ஜான் பண்டிகையின்போது அவர் முக்காடு போட்டபடியும், ஹுசைன் தொப்பி அணிந்தபடியும் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு, எல்லோரும் தன்னிடம் பிரியாணி கேட்பதாக நகைச்சுவையாக ஒரு பதிவை மணிமேகலை வெளியிட்டு இருக்கிறார். இந்த பழைய 2 பதிவுகளை இப்போது பகிர்ந்து அவர் மதம் மாறிவிட்டதாக தெரிவித்து வருகிறார்கள்.

மதம் மாறவில்லை

ஆனால், உண்மையில் எந்த இடத்திலும் மணிமேகலை மதம் மாறியதாக அறிவிக்கவே இல்லை. அவர்கள் நடத்தி வரும் யூடியூப் சேனலிலும் தங்களின் ஒவ்வொரு நகர்வு குறித்தும் இருவரும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், மதம் மாறுவது பற்றி சொன்னது இல்லை. அவர் ரம்ஜான் வாழ்த்து சொன்னதை வைத்து அப்போது மதம் மாறியதாக சர்ச்சையை சிலர் கிளப்பினர்.

 ஹுசைன் கோயிலுக்கு வருவார் -

ஹுசைன் கோயிலுக்கு வருவார் -

அது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட மணிமேகலை, "மதம் மாறிதான் ரம்ஜான் வாழ்த்து சொல்ல வேண்டுமா? யாரும் மதம் மாறவில்லை. ஹுசைன் என்னுடன் கோயிலுக்கு வருவார். நாங்கள் இருவரும் ஒன்றாக ரம்ஜான் கொண்டாடுவோம். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். உங்கள் குழப்பங்களை இங்கு கொண்டு வராதீர்கள்." என்று விளக்கி இருக்கிறார்.

ஹுசைனுடன் நிகழ்ச்சிகள்

அதேபோல் இருவரும் சேர்ந்து பொங்கல் வைக்கும் படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அத்துடன் தங்களின் வீட்டிற்கு ஹுசைனுடன் பாலக்கால் பூஜை செய்யும் படத்தையும் அவர் அண்மையில் பதிவிட்டு இருந்தார். பல முறை ஹுசைனுடன் விஜய் டிவி, யூடியூப் சேனல் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று இருக்கிறார்.

 மதம் மாறியதாக வதந்தி

மதம் மாறியதாக வதந்தி

ஆனால் மணிமேகலை என்ற பெயருடனே அனைத்திலும் பங்கேற்று வருகிறார். மதம் மாறியதாக எந்த இடத்திலும் சொன்னது கிடையாது. இதனை வைத்து பார்க்கையில் மணிமேகலை இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக பாஜகவினர் மற்றும் வலதுசாரிகள் பரப்பிய தகவல் வதந்தி என்பது உறுதியாகி இருக்கிறது.

Fact Check

வெளியான செய்தி

ஹுசைனை திருமணம் செய்த விஜய் டிவி தொகுப்பாளர் மணிமேகலை மதம் மாறிவிட்டார். லவ் ஜிஹாத். என ட்விட்டரில் பரவும் தகவல்

முடிவு

பழைய புகைப்படங்களை பகிர்ந்து மணிமேகலை மதம் மாறியதாக பரப்புகின்றனர். அதை மணிமேகலை மறுத்துள்ளார்.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+