Fact Check: தேர்தல் பத்திரம் மூலம் மார்க்சிஸ்ட் கட்சி நிதி வாங்கியதா? பரவும் தவறான தகவல்! உண்மை இதோ!
சென்னை: தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை என்றும், அவற்றை பயன்படுத்த தடை விதிப்பதாகவும் உச்சநீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றதாக தகவல் சோஷியல் மீடியாக்களில் பரவி வருகின்றன.
தேர்தல் பத்திரம் என்றால் என்ன?: அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது நிறுவனங்கள் ரொக்கமாகவோ, காசோலையாகவோ நன்கொடை கொடுப்பதற்கு பதிலாக, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2017-18ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவித்தது. இதனையடுத்து இது 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் எஸ்பிஐ வங்கி ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. இவை மற்ற மாதங்களில் 10 நாட்களும் தேர்தல் இருக்கும் மாதங்களில் அனைத்து நாட்களிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

என்ன பிரச்சனை?: “நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தங்களின் இந்தத் திட்டத்தைப் பற்றி யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காகவே, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான சட்டத் திருத்தங்களை பண மசோதாவாக கொண்டுவந்து, நாடாளுமன்றத்தில் எந்தவொரு விவாதமும் நடத்தாமலேயே நிறைவேற்றிக் கொண்டது” என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மேலும், இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
மத்திய அரசு சொல்வது என்ன?: இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சொலிசிட் ஜெனரல் துஷார் மேத்தா, “தேர்தல் பத்திரங்களை வாங்குவோரின் அடையாளம் மறைக்கப்படுவது சரிதான். ஏனெனில் சிலர் குறிப்பிட்ட கட்சிக்கு அதிக அளவில் நிதியளித்திருப்பார்கள். ஆனால் அவர்கள் நிதியளித்த கட்சி தோல்வியடைந்தால், வெற்றியடைந்த கட்சியினர், தோல்வியடைந்த கட்சிக்கு நிதியளித்தவர்களை பழிவாங்கக்கூடும். எனவே தேர்தல் பத்திரங்களை வாங்குவோரின் அடையாளம் மறைக்கப்படுவது சரிதான்” என்று கூறியிருந்தார்.
அரசியல் கட்சிகள் பெற்ற நிதி எவ்வளவு?: 2018-2023 வரையிலான காலத்தில் அரசியல் கட்சிகளின் ஆண்டு தணிக்கை அறிக்கையில், பாஜக ரூ.6,566.11 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ.1,123.3 கோடி, திரிணமூல் காங்கிரஸ் ரூ. 1,092.98 கோடி திமுக ரூ. 616.5 கோடி, அதிமுக ரூ.6.05 கோடியும் பெற்றுள்ளதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
சிபிஎம் நிதி பெற்றதா?: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த பத்திரங்கள் மூலம் நிதியை பெறவில்லை என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குறிப்பிட்டுள்ளார். அதேபோல கட்சியின் தலைமையும் இதனை உறுதி செய்திருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெறும் கட்சிகள் எஸ்பிஐ வங்கியில் இந்த பத்திரங்களை மாற்றுவதற்கு ஒரு அக்கவுண்ட்டை தொடங்க வேண்டும். ஆனால் சிபிஐஎம் கட்சி அப்படியாக எந்த அக்கவுண்ட்டையும் தொடங்கவில்லை. இத்தனைக்கும் கேரளாவில் சிபிஎம்தான் ஆளும் கட்சியாக இருக்கிறது.

Fact Check
வெளியான செய்தி
தேர்தல் பத்திரங்கள் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.367 கோடி நன்கொடை பெற்றிருக்கிறது.
முடிவு
தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற வேண்டும் எனில் எஸ்பிஐ வங்கியில் அதற்கென தனி அக்கவுண்ட் இருக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அப்படியான எந்த அக்கவுண்ட்டும் இல்லை.
ரேட்டிங்
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications