Fact Check: இந்துக்களுக்கு பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலக்கப்பட்டதா? உண்மை சரிபார்ப்பகம் மறுப்பு
சென்னை: இந்துக்களுக்கு பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து கொடுத்ததாக இந்து முன்னணி வதந்தி பரப்பி வருகிறது என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
கோவையில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்ததற்காக 2 ஆண்டுகளுக்கு முன் கடைக்கு சீல் என வதந்தி பரவி வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.

பரவிய வதந்தி
இந்து முன்னணி அமைப்பின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், பிரியாணி குறித்து ஒரு வீடியோ வெளீயிடப்பட்டிருந்தது. "பிரியாணி ஓர் பேராபத்து! Biryani centre to fertility centre! ஓர் உண்மை அலசல்" எனக் குறிப்பிடப்பட்டு ஒருவர் பேசும் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.
"கோவையில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்ததற்காக 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு கடைக்குச் சீல் வைக்கப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு வேறு பிரியாணியும், இந்துக்களுக்குக் கருத்தடை மாத்திரை கலந்த பிரியாணியும் கொடுப்பதால் இளைஞர்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது." என்று இந்து முன்னணி அமைப்பின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளியில் குறிபிடப்பட்டுள்ளது.
இந்துக்களுக்கு பிரியாணியில் கருத்தடை : இந்து முன்னணி பரப்பும் வதந்தி!@CMOTamilnadu @TNDIPRNEWS https://t.co/rT3dgY3Hg7 pic.twitter.com/cwXYHHWHxH
— TN Fact Check (@tn_factcheck) April 5, 2025
உண்மை என்ன?
கோவையில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுவதாகச் சமூக வலைதளங்களில் "பிரியாணி ஜிகாத்" என்ற ஹேஷ்டேக்குடன் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு தகவல் பரவியது. அப்போதே இது வதந்தி என்று தெளிவுபடுத்திய காவல்துறை, இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்பியதாகக் கூறி 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், தற்போது, அந்த வதந்தியை பிரதானப்படுத்தி, இந்து முன்னணி எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது வதந்தி என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
இந்துக்களுக்கு பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து கொடுத்ததாக இந்து முன்னணி சார்பில் வீடியோ வெளியிடப்பட்டது.
முடிவு
பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுவதாக சொல்லப்படுவது வதந்தி. ஏற்கனவே வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.
ரேட்டிங்
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications