கம்யூனிஸ்ட்டுக்கும் கம்யூனிஸ்ட்டுக்கும் சண்டை! தோழர்களுக்குள் வெடித்த மோதல்! விஜய்க்கு தான் சிக்கலே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசின் அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ஐயூஎம்எல் ஆகியவை இணைந்துள்ளன. இந்த நிலையில் அமைச்சரவையில் இடம் பெறுவது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் வேறு வேறு நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் கூட்டணிக்குள் குழப்பம் உண்டாகி உள்ளதாக சொல்கின்றனர் வட்டாரத்தினர்.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்த தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்தது. முதலில், காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது.

TN cabinet expansion

இந்த நிலையில், அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை ஆதரவளித்தன. ஆரம்பத்தில் ஆட்சியில் இணையாமல் வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்த விசிக பின்னர் அமைச்சரவையிலும் பங்கேற்றது.

தவெக அரசு

ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு இடதுசாரி கட்சிகளும் அமைச்சரவையில் இணையாமல், வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் தமிழக வெற்றிக்காக அரசுக்கு அளித்து வரும் ஆதரவு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விலகிக் கொள்ளலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. அதே நேரத்தில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணியை தொடர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் முடிவெடுத்திருக்கிறார் என்கின்றனர் தோழர்கள்.

இந்திய கம்யூனிஸ்ட்

அதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலுள்ள சில நிர்வாகிகள் குறிப்பாக திமுக ஆதரவுடன் வென்றவர்கள் அந்த தலைமைக்கு நெருக்கமாக இருக்கும் சில தலைவர்கள் தனித்துப் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விஜய் அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்து அடுத்த தேர்தலை சந்திக்கும் வரை இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவளிக்க வேண்டும் என அக்கட்சியின் எம்எல்ஏக்களான தளி இராமச்சந்திரன் நாகப்பட்டினம் மாரிமுத்து ஆகியோர் விரும்புகின்றனர்.

வீரபாண்டியன்

அதுமட்டுமல்லாமல் தவெக அமைச்சரவையில் இணையவும் அவர்கள் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு வீரபாண்டியனும் சம்மதம் தெரிவித்துள்ளார் என்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 'அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறும் சூழல் உருவாகி இருக்கிறது அதற்கான காலம் கனிந்துள்ளது. அந்த வாய்ப்பு கிடைக்கும்போது கிருஷ்ணகிரியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் அமைச்சராகவும் வாய்ப்புள்ளது" எனக் கூறியிருந்தார்.

சண்முகம்

அதாவது தளி ராமச்சந்திரனை குறிப்பிட்டு தான் வீரபாண்டியன் அவ்வாறு பேசியதாக சொல்கின்றனர். இந்த நிலையில் வீரபாண்டியன் பேசிய சில மணி நேரங்களில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மறுப்பு வந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளரான சண்முகம் தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம் என்ற முடிவை, இந்திய கம்யூனிஸ்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சேர்ந்துதான் எடுத்தோம். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் எதற்காக இந்த கருத்தை தெரிவித்தது என தெரியவில்லை. இதுகுறித்து வீரபாண்டியனிடம் தான் கேட்க வேண்டும். அமைச்சரவையில் இணைய மாட்டோம் என்ற எங்களது நிலைப்பாட்டில் என்ற மார்க்கமும் இல்லை. என முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

அமைச்சரவை

இதன் மூலம், தவெக அரசில் அமைச்சரவைப் பொறுப்பு ஏற்பது குறித்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெவ்வேறு நிலைப்பாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், வரும் 20-ஆம் தேதி சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

தேர்தல் கூட்டணி

அந்தக் கூட்டத்தில், தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பது, உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி மற்றும் அமைச்சரவையில் பங்கேற்பது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், தவெக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணையுமா, அல்லது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் என்ன முடிவெடுக்கப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+