கனடாவுக்கு எதிர்ப்பு! "கனரா" வங்கி முன் போராட்டம் நடத்திய பாஜகவினர்? தீயாக பரவும் போட்டோ! உண்மை என்ன
டெல்லி: இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் உச்சமடைந்துள்ள நிலையில், கனடாவுக்குப் பதிலாக கனரா வங்கிக்கு முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்தியதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே உறவு மோசமடைந்து வருகிறது. அங்கிருந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் என்பவர் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இதற்கு முக்கிய காரணம்.

இதையடுத்து இந்தியாவும் கனடாவும் மாறி மாறி தூதர்களை வெளியேற்றுவது, குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்தன. குறிப்பாகக் கனடா குடிமக்களுக்கு இனி விசாக்களை வழங்கப்போவது இல்லை என்ற அதிரடி முடிவை இந்தியா அறிவித்தது.
கனரா வங்கி முன் போராட்டம்: கனடாவின் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுக்கும் இந்தியா, ஆதாரங்களை வெளியிடுமாறு வலியுறுத்துகிறது. இருப்பினும், இந்த விவகாரத்தில் ஆதாரங்களை வெளியிட மறுக்கும் இந்தியா, தொடர்ந்து கனடாவைக் குற்றஞ்சாட்டுவதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு தொடர்ந்து மோசமடைந்தே வருகிறது. இந்த மோதல் சில காலம் தொடரும் என்றே தெரிகிறது.
இப்படி இந்தியாவுக்கும் கனடாவுக்கும் மோதல் போக்கே நிலவி வருகிறது. இந்தச் சூழலில் தான் கனடாவுக்குப் பதிலாக கனரா வங்கிக்கு முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்தியதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இது குறித்து போட்டோக்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில், "கனரா வங்கியைக் கனடாவுக்குச் சொந்தமானது எனக் கருதி, வங்கியின் முன் பாஜகவினர் போராட்டம் நடத்துகிறார்கள். இதை என்னவென்று சொல்வது.. " என ஒருவர் பதிவிட்டிருந்தார்.
உண்மை என்ன: இந்தப் படத்தை பல்வேறு நபர்களும் இணையத்தில் வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர். இந்தப் படத்தைப் பார்த்தால் தமிழ்நாட்டில் ஏதோ இடத்தில் எடுக்கப்பட்டது போலவே இருக்கிறது. எனவே, இந்த சம்பவம் உண்மை தானா என்பது குறித்து நாம் பார்க்கலாம். இந்தப் படத்தில் பலரும் மாஸ்க் அணிந்து இருக்கிறார்கள்.. இதை வைத்தே இது போட்டோ இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கொரோனா காலத்தில் தான் மாஸ்க் கட்டாயம் என இருந்தது. இப்போது யாரும் மாஸ்க் அணிவதில்லை.

அடுத்து இந்த படத்தை நாம் ரிவைர்ஸ் சேர்ச் செய்து பார்த்ததில், இது 2020இல் நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெளிவாகிறது. நமது ஊட்டியில் தான் இந்த போட்டோவை அவர்கள் எடுத்துள்ளனர். அங்கே ஊட்டியில் இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டதால் ஊட்டி நகராட்சியைக் கண்டித்துக் கடந்த 2020 ஆக். 29ஆம் தேதி நடத்தப்பட்ட போராட்டத்தில் எடுக்கப்பட்ட படம் தான் என்பதை உறுதியானது.
போலி: அதிலும் கூட உண்மையான போட்டோவில் அங்கே கனரா வங்கி எதுவும் இல்லை. அங்கே தனியார் மொபைல் ஷோ ரூம் தான் இருக்கிறது. அதைத்தான் எடிட் செய்து கனரா வங்கி அருகே பாஜகவினர் போராட்டம் நடத்துவது போல இப்போது பரப்பி வருகின்றனர். இதன் மூலம் கனடாவுக்குப் பதிலாக கனரா வங்கிக்கு முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்தியதாக இணையத்தில் பரவிய தகவல் பொய் என்பது தெளிவாகத் தெரிகிறது.

Fact Check
வெளியான செய்தி
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் மோதல் உச்சமடைந்துள்ள நிலையில், கனடாவுக்குப் பதிலாக கனரா வங்கி முன்பு பாஜகவினர் போராட்டம்
முடிவு
கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட போட்டோவே எடிட் செய்து பரப்பும் போலி செய்தி இது
ரேட்டிங்
-
வந்தது 3 கப்பல்கள்.. 24 கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கொண்டு வர ரூட் போடும் இந்தியா! -
புதுச்சேரியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி.. பாஜக + அதிமுக + லஜகவுக்கு 14 சீட்! -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
குழாய் வழி எரிவாயு இணைப்பு வைத்திருப்போருக்கு கட்டுப்பாடு! மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கை! -
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு! -
வங்கதேசம் மட்டுமில்லை.. இந்தியாவிடம் கெஞ்சும் இலங்கை - மாலத்தீவு.. ஈரான் போரால் மாறிய நிலைமை -
மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்.. யாரும் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்- உச்ச நீதிமன்றம்! -
இந்திய எல்பிஜி கப்பல்களை அனுமதித்த ஈரான்.. இந்தியாவின் பவர் இதுதாங்க! சைலண்ட் சம்பவம் -
ஹார்முஸ் முடங்கினாலும் பிரச்சனை வராது.. LPG சிக்கலுக்கு உள்நாட்டிலேயே இருக்கும் தீர்வு! இது தெரியுமா -
ஜிகிரி தோஸ்த்து.. நாங்க ஹெல்ப் பண்ணுவோம்! இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஈரான் உதவி! மேட்டர் ஓவர் -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
உள்நாட்டிலேயே கேஸ் இல்லாத போது.. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி படுஜோர்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு










Click it and Unblock the Notifications