சென்னை சூப்பர் மார்கெட்ல துள்ளி அடிக்கும் மீன்களை பாருங்க! வெள்ள பாதிப்பு என பரவும் வீடியோ உண்மையா?
சென்னை: சென்னையில் ஏற்பட்டு உள்ள பெரு வெள்ளத்தின்போது சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்குள் புகுந்த மழை நீரில் மீன்கள் துள்ளி அடிக்கும் காட்சி என்று ஒரு வீடியோ அதிகளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மை தன்மை என்னவென்று பார்ப்போம்.
சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் கொட்டித் தீர்த்த பெரும் மழையின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகள், கடைகள் என எல்லா இடங்களுக்கு உள்ளேயும் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர். சென்னை வெள்ளம் தொடர்பாக பல்வேறு காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி காண்போரை கலங்க வைத்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க இதுதான் வாய்ப்பு என்று கருதி அரசியல் உள்நோக்கம் காரணமாகவும், சமூக வலைதளத்தில் அதிக லைக்குகளை பெறுவதற்காகவும் பலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

குறிப்பாக 2015 ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின்போது எடுத்த காட்சிகள், வெவ்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது எடுக்கப்பட்ட காட்சிகளை பகிர்ந்து தற்போது ஏற்பட்ட சென்னை வெள்ளம் என்று பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. "சென்னை வெள்ளத்தின்போது சூப்பர் மார்க்கெட் உள்ளே என்ன நடக்கிறது என்று பாருங்கள்" என்றி குறிப்பிட்டு சென்னையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்குள் புகுந்த வெள்ள நீரில் மீன்கள் துள்ளி அடித்ததாக தெரிவித்து உள்ளனர்.
அந்த வீடியோவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றின் தரையில் தேங்கி கிடக்கும் நீரில் நூற்றுக்கணக்கான மீன்கள் துள்ளுகின்றன. அந்த வீடியோ உற்று நோக்கும்போது அவை வளர்ப்பு மீன்களை போன்றே தெரிந்தன. அதேபோல் அங்கிருந்தவர்கள் சென்னை மக்களைபோல் இல்லை. வெள்ளையர்கள்போன்று இருப்பதை காண முடிந்தது. இது தொடர்பாக கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் நாம் ஈடுபட்டோம். அப்போது வைரல் ஹாக் என்ற யூடியூப் சேனலில் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார்கள்.

என்ன நடந்தது என்று முழுமையாக விசாரித்தபோது இந்த வீடியோ ஜியார்ஜியாவின் திபிலிசி என்ற நகரத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த மிகப்பெரிய மீன் தொட்டி ஒன்று திடீரென உடைந்ததால் தண்ணீர் சூழ்ந்து உள்ளே இருந்த மீன்கள் அதில் துள்ளியடித்தன. இதனை கடை ஊழியர்கள் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டார்கள். இதைதான் சென்னை வெள்ளம் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

Fact Check
வெளியான செய்தி
சென்னை வெள்ளத்திபோது அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்குள் புகுந்த நீரில் மீன்கள் துள்ளி குதிக்கின்றன.
முடிவு
இது 2018 ஆம் ஆண்டு ஜியார்ஜியாவில் மீன் தொட்டி உடைந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ
ரேட்டிங்
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications