என்னது வாஜ்பாய் உயிரோட இருக்காரா? இந்த போட்டோவ பாருங்க! என்ன பண்ணி வெச்சு இருக்காங்க - FACT CHECK
சென்னை: இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது குழந்தை பருவம் என்று பகிரப்பட்டு வரும் புகைப்படத்தின் உண்மை நிலையை அறிவோம்.
பாஜக நிறுவனர்களில் ஒருவரும், இந்திய முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 18 ஆம் தேதி அவர் டெல்லியில் வயது மூப்பின் காரணமாக தனது 93 வது வயதில் காலமானார். இன்று வாஜ்பாய் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள் பலர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் வாஜ்பாயின் சிறுவயது புகைப்படம் என்று சொல்லி ஒரு பதிவு சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு வாஜ்பாய் மரணமடைந்த சமயத்தில் இருந்து அவரது ஒவ்வொரு பிறந்தநாள், நினைவு நாட்களின்போதும் இந்த புகைப்படத்தை பகிர்கிறார்கள். அடல் பிகாரின் வாஜ்பாய் தன்னுடைய தாயுடன் இருக்கும் புகைப்படம் என்று குறிப்பிட்டு அதை பதிவிட்டு வருகிறார்கள். பலரும் உணர்ச்சி வசப்பட்டு அதை பகிர்ந்தும் விடுகிறார்கள்.

இதன் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய ரிவர்ஸ் இமேஜ் தேடலை செய்தபோது அந்த குழந்தை வாஜ்பாயா இல்லை வேறு ஒருவரா என்பது தெரியவந்தது. ஆம், அது வாஜ்பாயின் படம் இல்லை. அந்த வாஜ்பாய் என்று பகிரப்பட்டு வரும் அந்த படத்தில் இருப்பவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள காந்தி ஸ்வராஜ் ஆசிரமத்தின் தலைவர் ராணு ஷங்கர். வாஜ்பாயின் அம்மா என்று கூறப்பட்ட பெண் நீலம் ஷங்கர். அவர் ராணுவின் தாய்.
கடந்த 1978 - 1980 க்கு இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது என்றும், தன்னுடைய தாய் காலமான பிறகு ரானா சங்கர் என்ற பெயரை ராணு நீலம் ஷங்கர் என்று மாற்றிக்கொண்டு இருக்கிறார் அவர். கடந்த 2018 ஆம் ஆண்டு பேஸ்புக்கில் அவர் இந்த படத்தை பதிவேற்றம் செய்து இருக்கிறார்.

உடனே அதே ஆண்டில் மறைந்த வாஜ்பாயின் படம் என்று கதை கட்டி விட்டு இருக்கிறார்கள். கடந்த 4 ஆண்டுகளாக இந்த வதந்தி உண்மை என்று நம்பி பலரால் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பேஸ்புக்கில் தான் ரிப்போர்ட் செய்து இருப்பதாகவும், ஆனாலும், தொடர்ந்து அது வாஜ்பாய் படம் என பகிரப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை உறுதிபடுத்த ஆங்கில இணையதளத்துக்கு ராணு ஷங்கர் தன்னுடைய தற்போதைய புகைப்படத்தையும், தனது தாய் தூக்கி வைத்து இருந்த புகைப்படத்தின் அச்சை மீண்டும் படம் பிடித்து அனுப்பி இருக்கிறார். வாஜ்பாய் பிறந்த ஆண்டு 1924. அப்போது இதுபோன்ற புகைப்படங்களை எடுத்திருக்க முடியுமா என்று ஒரு நொடி சிந்தித்தாலே இது வதந்தி என்று தெரிந்திருக்கும்.

Fact Check
வெளியான செய்தி
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் குழந்தையாக இருக்கும்போது தாயுடன் தூக்கி வைத்திருக்கும் படம்
முடிவு
இந்த படத்தில் இருக்கும் குழந்தையின் பெயர் ராணு ஷங்கர். இவர் இன்னும் உயிருடன் உள்ளார்.
ரேட்டிங்
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications